அம்பானி வீட்டு திருமணத்தை மிஞ்சும் அதானி வீட்டு கல்யாணம்!! இத்தனை ஏற்பாடுகளா?

Gautam Adani Son Jeet Adani Wedding Ceremony Details : இந்தியா மட்டுமல்ல, உலகளவில் பலரை திரும்பி பார்க்க வைத்த திருமணம், அம்பானி வீட்டு திருமணம். ஆனால், இதை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதானி தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Gautam Adani Son Jeet Adani Wedding Ceremony Details : இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்குபவர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம், உலகளவில் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. பிரபலங்கள் பலர் இந்த திருமணத்திற்கு வருகை புரிய, அவர்களை வரவேற்க அம்பானி குடும்பம் செய்த விஷயங்கள் மற்றும் ஊருக்கே விருந்தளித்தது ஆகியவை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில், அம்பானி வீட்டு திருமணத்தை மிஞ்சும் அளவிற்கு அதானி வீட்டு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திருமண ஏற்பாடுகளும் தற்போது தடபுடலாக நடைப்பெற்று வருகிறதாம். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /8

கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி, திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சி என அத்தனையில் ஆடம்பரம் அள்ளி தெளித்தது.

2 /8

இந்த திருமணத்தில் ஜஸ்டின் பீபர், ரிஹானா உள்ளிட்ட பல்வேறு பிரபலமான வெளிநாட்டு பாடகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினர். இந்த திருமணத்தில் அனைவருக்கும் அளிக்கப்பட்ட பத்திரிகைகளில் இருந்து, சாப்பாடு, கார்கள், தாம்பூலம் வரை அனைத்தும் மிக மிக விலை உயர்ந்ததாக இருந்தது. தற்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் அதானி வீட்டு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 /8

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு ஜீத் அதானி என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் ஜய்மின் ஷா என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடு விவரங்களை பார்க்கலாமா?

4 /8

அதானி மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களுக்கென தனித்தனியாக போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர்களை நியமித்திருக்கின்றனராம். இந்த திருமண வீடியோ பிரபலமான ஓடிடி தளம் ஒன்றில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

5 /8

அதானி வீட்டு திருமணத்திற்கு வரும் பிரபலங்களுக்கு, பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பு செய்யப்பட இருக்கிரதாம். அந்த ஆடைகள் தங்க ஜரிகையால் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றின் விலையும் கோடிக்கணக்கில் இருக்குமாம்.

6 /8

அதானி திருமணம் நடக்கும் நிகழ்வில், இந்தியாவின் மிகப்பெரிய ரங்கோலி போடப்பட இருக்கின்றதாம். இதனை, 50,000 கலைஞர்கள் சேர்ந்து போட இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, திருமணம் நடக்க இருக்கும் இடத்தில் இருக்கும் அனைத்து ஆடம்பர ஹோட்டல்களும், 90 சதவிகிதம் புக் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

7 /8

அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக நீரில் மிதக்கும் அரண்மனையாக இதனை மாற்றி இருக்கின்றனராம். இந்த திருமணத்தில் சமைப்பதற்காக 58 நாடுகளை சேர்ந்த சமையல்கலை வல்லுநர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

8 /8

உலகளவில் டாப் பாடகியாக இருக்கும் டெய்லர் ஸ்விஃப்ட், இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.