Pongal Celebration: பொங்கல் பண்டிகை முடிந்து பலரும் பணிக்கு திரும்பி வரும் நிலையில், அடுத்த விடுமுறை எப்போது வரும் என்று பலரும் ஆர்வமாக உள்ளனர்.
பொங்கல் பண்டிகை இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். அடுத்த விடுமுறை எப்போது வரும் என பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணத்தை மேற்கொள்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாகிறது.
நீண்ட நாட்கள் விடுமுறை வரும் போது அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற துறையை சார்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அல்லது வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுகின்றனர்.
உதாரணமாக கடந்த ஆண்டு ஆயுதபூஜை சமயத்தில் நீண்ட நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு மேல் விடுமுறை கிடைத்தது.
அடுத்து பெரிதாக விடுமுறை இருக்காது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் இருக்கும். இதனால் யாராலும் சொந்த ஊர்களுக்கு கூட செல்ல முடியாது. திருமணம் மற்றும் பிற விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்படும். இதனால் பலரும் மே மாதங்களில் சுற்றுலாவை திட்டமிடுவார்கள்.
இதனால் பலரும் வரவிருக்கும் தைப்பூச விடுமுறையை சிறப்பாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர், இந்த விடுமுறையை திறம்பட பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர். பிப்ரவரி மாதம் தை பூசம் வருகிறது.