குழந்தைகளை பதின்பருவ வயதினராக மாற்றும் சிறந்த 7 காலை பழக்கங்கள்!

குழந்தைகளுடன் பெற்றோர்கள் அன்பாகப் பழக வேண்டும். இது அவர்களின் உள்ளார்ந்த மனதை மாற்றியமைக்கும். காலை பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி வருவது நல்லது. குழந்தைகளின் சிறந்த காலை 8 பழக்கங்கள் பார்க்கலாம். 

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும்.  இது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். குழந்தைகளிடம் பெற்றோர்கள் நல்ல விஷயங்களை விதைத்தால் நல்ல பழக்கங்கள் உருவாகும். பெற்றோர்கள் வளர்ப்பில் குழந்தைகள் எதிர்காலம் அமைந்துள்ளது. 

1 /8

சுத்தம்: ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் படுக்கையைச் சுத்தம் செய்யும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும்.   

2 /8

விடியலில் எழுதல்: நேரத்திற்குத் தூங்கும் பழக்கம் மற்றும் நேரத்திற்குக் காலையில் எழும் பழக்கம் தொடர்ந்து செய்வதால் குழந்தைகளுக்குப் பொறுப்பும், சுய ஒழுக்கமும் உருவாகும் எனச் சொல்லப்படுகிறது.

3 /8

நன்றியுணர்வு: குழந்தைகளுக்கு நன்றியுணர்வை வளர்க்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

4 /8

உணவு: குழந்தைகள் காலையில் சத்தான சமச்சீர் உணவைச் சாப்பிட வேண்டும். இது அன்றாடம் அவர்களைப் புத்துணர்வாக வைத்திருக்க உதவும் என்றுக் கூறப்படுகிறது.   

5 /8

உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி தினமும் அவர்களே தானாக முன்வந்து செய்ய வேண்டும். மேலும் குழந்தைகள் அன்றாடம் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் அவர்கள் புத்துணர்வாக இருக்க உதவும். 

6 /8

புதியது கற்றல்: புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு புதிய விஷயங்களைக் காட்சியின் மூலம் கற்றுத் தருவது கூடுதல் அறிவு மற்றும் தெளிவைப் பெறுவார்கள். 

7 /8

திட்டமிடல்: காலை எழுந்ததும் குழந்தைகளுக்குத் திட்டமிடல் பழக்கத்தைச் சொல்லித் தர வேண்டும். ஒவ்வொரு செயல்களுக்கும் நேரம் திட்டமிட்டு வேலை செய்யும் பழக்கம் அவர்களுக்குள் உருவாக வேண்டும். 

8 /8

மரியாதை: வீட்டில் மற்றும் வெளியில் செல்லும் இடங்களில் மரியாதையுடன் பேசும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் காலை எழுந்ததும் குழந்தைகளை மரியாதையுடன் நடத்தினால் அவர்களும் மரியாதை கொடுக்கத் தொடங்குவார்கள்.