முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை.. ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா?

நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பிரபலங்களின் திருமணங்கள் ரசிகர்களை ஈர்பதுண்டு. அப்படி ஈர்த்த ரவி மோகன் - ஆர்த்தி ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நேற்று(ஜன.18) குடும்ப நீதிமன்றம் முன்பு மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. 

1 /8

நடிகர் ரவி மோகனும் (ஜெயம் ரவி) ஆர்த்தியும் காதலித்து கடந்த 2009ல் திருமணம் செய்து கொண்டனர். 

2 /8

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் ஒருவர் ஆரவ் ரவி மோகனின் டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார். 

3 /8

இந்த நிலையில்,  கடந்த ஆண்டு அக்டோபரில் ஆர்த்தியுடனான தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக ரவி மோகன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். 

4 /8

தொடர்ந்து மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். 

5 /8

இந்த வழக்கை விசாரித்த 3வது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி சுமுக பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி ரவியும் ஆர்த்தியும் பலமுறை ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்து வருகின்றனர். 

6 /8

இந்த நிலையில் , நேற்று மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 

7 /8

இருவரும் காணொலி மூலம் ஆஜராகிய நிலையில், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடர்ந்து நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின், வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறி, வழக்கு விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

8 /8

இதற்கிடையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாகவும் இதுவே ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறக் காரணம் என்றும் தகவல்கள் பரவின. பின்னர் ரவி மோகனே இதனை மறுத்தார். கெனிஷா தனது நண்பர் என ரவி கூறியிருந்தார். இருப்பினும் ஆர்த்தியின் தாயார் தலையீடுதான் இவர்களின் பிரிவிற்கு காரணம் என்றும் தகவல்கள் பரவின.