Tamil Nadu Government Employees Latest News: அரசு ஊழியர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை எவ்வளவு? யாருக்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Tamil Nadu Latest News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ரூ.25,000 வழங்குவது சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாகும். இது சார்ந்த முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ரூ.25,000 வழங்குவது சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாகும். இது சார்ந்த முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
அரசு ஊழியர்கள் உயர் படிப்பிற்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதலுடன் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்து மனிதவலை மேம்பாட்டுத் துறை சார்பில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அரசாணையை வெள்ளியிட்டார்.
தமிழக அரசாணையில் கூறியிருப்பதாவது, "அரசு ஊழியர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை உயர்த்தும் போது அதற்கான ஊக்கத்தொகை பெற்று வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அதனுடன் உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது.
மேலும் பிடெக், பிஎஸ்சி வேளாண்மை, எம்பிஏ உள்ளிட்ட படிப்புகள் படித்தவர்களும் தற்போது அரசு ஊழியர்களாக முயற்சியில் உள்ளனர். இவர்களுக்கான உயர் தகுதி அடிப்படையில் தேவையான ஊதிய உயர்வு வழங்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2020 மார்ச் மாதம் கூடுதல் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு பணியாளர்கள் தங்கள் பணிகாலத்தில் பெறும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசு பணியாளர்கள் பெறக்கூடிய கூடுதல் கல்வித்தகுதியின் மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, 2020 ஆம் ஆண்டு மார்ச் 10 தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் பெறும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கான ஒருமுறை கணிசமான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி பிஎச்டி முடித்தால் ரூ.25 ஆயிரம், முதுநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருந்தால் ரூ.20 ஆயிரம், பட்டப்படிப்பு, பட்டயம் முடித்திருந்தால் ரூ.10 ஆயிரம் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே ஊக்கத்தொகை கேட்டு விண்ணப்ப தீர்ப்புகளும் சேர்த்து ஊக்கத்தொகை வழங்குவதற்கு வழிகாட்டுதலுடன் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அந்தந்த பதவிகளுக்கு தேவைப்படும் என வகுக்கப்பட்ட கல்வித்தகுதியை கூடுதலாக பெறுபவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடையாது. அனைத்து பதவி நிலைகளில் இருப்பவர்களுக்கும் இந்த கணிசமான ஊக்கத்தொகை ஒரே மாதிரியாக இருக்கும். அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் போது கல்வி படிப்புக்காக விடுப்பெடுத்து கூடுதல் தகுதி பெற்றாலோ ஊக்கத்தொகை கிடையாது.
பணியில் சேர்ந்த பிறகு பெறும் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழக மானியக் குழு, ஏஐசிடி அமைப்பால் அங்கீகரிக்கப்படும் கல்வித்தகுதிகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதேநேரத்தில் ஒரு பணியாளர் பணிகாலத்தில் இரண்டு ஊக்கத்தொகை பெறுவதற்கான அனுமதி உண்டு. ஒரு கல்வித்தகுதிக்கும் மற்றொரு தகுதிக்கும் இடையில் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும். அரசுப் பணியாளர் உயர் கல்வி முடித்த ஆறு மாதங்களுக்குள் ஒருமுறை கணிசமான ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். துறையால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஊக்கத்தொகை பெற முடியாது. இதுவரை முன் தேதியிட்ட ஊதிய உயர்வு பெறாத பணியாளர்களுக்கு மட்டும் இந்த ஊக்கத்தொகை பெற தகுதி உண்டு எனக் கூறப்பட்டிருக்கிறது.