தந்தேரஸ் பண்டிகையில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம்! தீபாவளியை குஷியாக கொண்டாடும் ராசிகள்!

Lakshmi Narayana Yogam On Dhanteras: சுக்கிரன் விருச்சிக ராசியில் இருக்கும்போது அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக சேர்க்கையால் விருச்சிக ராசியில் சுக்கிரனும் புதனும் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது...

 

Dhanteras: அக்டோபர் 31ம் தேதியன்று தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படும் நிலையில், அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக தந்தேரஸ் பூஜை நடைபெறும். லக்ஷ்மிக்கு உரிய நாளான அன்று லக்ஷ்மி நாராயண யோகம் உருவாவது மிகவும் சிறப்பானது. 

1 /14

விருச்சிக ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் அக்டோபர் 29 அன்று நடைபெறும் புதன் பெயர்ச்சீயால் விருச்சிகத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது...

2 /14

புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் மீன ராசிக்காரர்களின் நிதி நிலையை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். அன்னை லட்சுமியின் அருளால் தொட்டதெல்லாம் துலங்கும்

3 /14

பணவரவை அதிகரிக்கும் லக்ஷ்மி நாராயண யோகம், தொழில் மற்றும் வியாபாரத்தை சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்! 

4 /14

எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடையும் மகர ராசிக்காரர்கள், எந்த வேலை எடுத்தாலும் அதில் முதலிடத்தில் இருப்பார்கள். எதிர்பாராத வெற்றிகளும் சாத்தியமாகும். முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்

5 /14

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குதூகலம் கொப்பளிக்கும், ஆசைப்பட்ட விஷயங்களை இந்த யோகம் நிறைவேற்றித் தரும்

6 /14

விருச்சிக ராசியில் புதனும் சுக்கிரனும் ஒன்றிணைவதால் ஏற்படும் இந்த யோகத்தின் பலனை அதிகம் அனுபவிக்கப்போவது விருச்சிக ராசியினர் தான்

7 /14

அழியாத செல்வத்தைத் தந்து மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் யோகமாக லக்ஷ்மி நாராயண யோகம் இருக்கும்

8 /14

கன்னி ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் சுபகாலம் தொடங்கும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

9 /14

சுக்கிர பகவானின் அருளாசி, சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், புதனோடு சேர்ந்தால் கூடுதல் பலன்களைக் கொடுப்பார்

10 /14

புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகவிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும், சுப செலவுகளும் ஏற்படலாம்

11 /14

மிதுன ராசியினருக்கு பொற்காலம் தொடங்கிவிட்டது. கொடுத்த பணம் வராதோ என்ற கவலையுடன் இருந்தவர்கள், இனிமேல் ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு பணம் வந்து சேரும்

12 /14

ரிஷப ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பண ஆதாயத்தைக் கொடுக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும்

13 /14

மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் நல்ல செய்திகளைத் தரும். மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். சொத்து மற்றும் வாகனங்களால் நல்ல அனுபவம் கிடைக்கும் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது