கார், 5 ஏக்கர் நிலம் ஆகியவை வைத்திருந்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் மீது ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு கொடுக்கும் கலைஞர் உரிமைத் தொகை தகுதியில்லாமல் பெறும் பயனாளிகள் மீது ஆன்லைனில் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்து உண்மை நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கலைஞர் உரிமைத் தொகை நிறுத்தப்படும். எப்படி புகார் அளிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு மாதந்தோறும் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) தகுதி வாய்ந்த பெண்கள் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் பல மாதங்களாக கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.
ஆனால், சிலர் அரசு நிர்ணயித்திருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளுக்கு மாறாக ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். தகுதியில்லாமல் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பெறுபவர்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
5 ஏக்கருக்கும் மேலாக நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதிபெற முடியாது. கார், டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது.
2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், எம்எல்ஏ, எம்பி, மாவட்ட, ஒன்றிய, நகரம், ஊராட்சி பிரதிநிதிகளின் குடும்பத்தார் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது. ஏற்கனவே அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற முடியாது.
இருப்பினும் இதனை அரசிடமிருந்து மறைத்து பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக இருந்து வருகின்றனர். இவர்களால் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை பணம் ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் போகிறது. அதனால், இத்தகைய பயனாளிகள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டால், புதிய தகுதி வாய்ந்த பயனாளிகள் கலைஞர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு தெரிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த தகுதிகளை உள்ளவர்கள் பெற்றால் கலைஞர் உரிமைத் தொகை திட்ட வலைதளத்துக்கு சென்று நேரடியாக புகார் அளிக்கலாம். தகுதியில்லாத கலைஞர் உரிமைத் தொகை பயனாளியின் பெயர், ஊர், வட்டம், மாவட்டம், ரேஷன் கடை, அவர் எதனால் கலைஞர் உரிமைத் தொகை பெறமுடியாது என்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
புகார் அளிப்பவரின் பெயர், ஊர், தொலை பேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகுதிகளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தும் வருவாய்த்துறை, உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் நேரடி விசாரணையில் ஈடுபடுவார்கள். அப்போது, பயனாளியின் தகுதியின்மை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கான மாதாந்திரம் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும்.
அதேபோல், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப எண் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். விரைவில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.