Child Actress In Actor Karthi Movie Now Heroine Of His Film : கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த நடிகை, இப்போது அவருக்கே ஜோடியாக நடித்து வருகிறார். அவர் யார் தெரியுமா?
Child Actress In Actor Karthi Movie Now Heroine Of His Film : தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு நடிகையுடன் இப்போது நடிகர் கார்த்தி ஜோடி போட்டு நடித்து வருகிறார். இது போல நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தும் மீனாவுடன் நடித்திருக்கிறார். இப்போது, நடிகர் கார்த்தியும் இதே போல செய்திருப்பது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
2010ஆம் ஆண்டு வெளியான நான் மகான் அல்ல படத்தை பார்த்திருப்போம். அதில், நடிகர் கார்த்தி க்யூட்டாக ஒரு குழந்தைக்கு ஹாய் சொல்வதையும் பார்த்திருப்போம்.
ஆனால், இந்த குழந்தை சில காட்சிகளுக்கு மட்டும்தான் வரும். இந்த குழந்தை, இப்போது வளர்ந்து நடிகர் கார்த்திக்கே ஜோடியாக நடிக்கிறது. அந்த குழந்தை யார் தெரியுமா?
அந்த குழந்தை வேறு யாருமில்லை, கீர்த்தி ஷெட்டிதான். தற்போது தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருக்கிறார். இவர்தான் அந்த குழந்தையா என்பது குறித்த இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், முக ஜாடை ஒரே மாதிரி இருப்பதால் இது குறித்து பலர் சந்தேகித்து வருகின்றனர்.
நளன் குமாரசாமி இயக்கி வரும் வா வாத்தியார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.
கீர்த்தி ஷெட்டி, தற்போது கார்த்தி மட்டுமல்லாது பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். வா வாத்தியார் படத்தில் கார்த்தி-கீர்த்தி ஷெட்டியுடன் சேர்ந்து சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்.
கீர்த்தி ஷெட்டி இப்போது தமிழில் பிரதீப் ரங்கனாதனுடன் சேர்ந்து, விக்னேஷ் சிவனின் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி ஷெட்டிதான், அந்த நான் மகான் அல்ல குழந்தை என்பதை தெரிந்த ரசிகர்கள் தற்போது பயங்கர ஷாக் ஆகி இருக்கின்றனர்.