Kalaingar Magalir Urimai Thogai | புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மகளிர் உரிமைத் தொகை வாங்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Kalaingar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு புதியதாக வாங்கியவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு (Kalaingar Magalir Urimai Thogai) விண்ணப்பித்து, மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர்.
இன்னும் சிலர் இந்த திட்டத்தில் தகுதியிருந்தும் பயனாளிகளாக இருக்கவில்லை. அவர்களுக்காக விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிகபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது ஏற்கனவே தகுதியிருந்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்காதவர்கள் இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல் இப்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தான் புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கான குட் நியூஸ் மக்களே. உங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் புதியதாக ரேஷன் கார்டு வாங்கியதும், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்லுங்கள்.
அங்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்கலாம். இ-சேவை மைய ஊழியர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து அதற்கான ஒப்புகைச் சீட்டை உங்களிடம் கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து உங்களின் விண்ணப்பம் மேலதிகாரிகளின் பரிசீலனைக்கு செல்லும்.
ஆனால் எப்போது உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும் என உறுதியாக சொல்ல முடியாது. உங்களிடம் இருக்கும் ஒப்புகைச் சீட்டைக் கொண்டு விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கான ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால், ஒருவேளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் மீதான பரிசீலனை விரைவில் தொடங்கினால் நீண்ட நாட்களாக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுடன், உங்களுடைய விண்ணப்பமும் சேர்ந்து பரிசீலிக்கப்படும். பின்னர் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்பட்சத்தில் விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டில் விரைவில் நடக்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் புதியதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தாமதிக்க வேண்டும்.
அதேநேரத்தில் விண்ணப்பிக்கும் முன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டு,அதன்பின் விண்ணப்பிக்கவும். இது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.