அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்கள்) பயனடைவார்கள். அமைச்சரவை கூட்டம் குறித்து விளக்கம் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதன் மூலம் மத்திய கருவூலத்திற்கு ரூ.9,448 கோடி நிதி தாக்கம் ஏற்படும் என்று கூறினார்.

1 /11

7வது ஊதியக்குழு: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த நல்ல செய்தி அளிக்கப்பட்டது. ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

2 /11

பண்டிகை காலத்தில் பயனளிக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இது ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும்.

3 /11

மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அதிகரிப்புக்கு பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவவை 53% ஆக உயர்ந்துள்ளன.

4 /11

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்கள்) பயனடைவார்கள். அமைச்சரவை கூட்டம் குறித்து விளக்கம் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதன் மூலம் மத்திய கருவூலத்திற்கு ரூ.9,448 கோடி நிதி தாக்கம் ஏற்படும் என்று கூறினார்.

5 /11

ஊதிய உயர்வு கணக்கீடு: சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ 30,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.18,000 இருந்தால், அவர் தற்போது அகவிலைப்படியாக ரூ 9,000 -ஐப் பெற்றுவருகிறார். இது அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஆகும். இப்போது 3% டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு அவருக்கு அகவிலைப்படியாக மாதம் ரூ.9,540 கிடைக்கும். அதாவது இப்போது அவருக்கு மாதா மாதம் ரூ.540 அதிகமாக கிடைக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.   

6 /11

சம்பள உயர்வு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். 

7 /11

அகவிலைப்படி அதிகரிப்பு அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

8 /11

ஏஐசிபிஐ குறியீடு: ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரு முறை அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது. 

9 /11

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஜனவரிக்கான உயர்வில், மார்ச் 2024 இல், மத்திய அரசு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அதிகரித்து 50 சதவீதமாக உயர்த்தியது. அரசாங்கம் அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

10 /11

அகவிலைப்படி கணக்கீடு: 2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கிடுவதற்கான சூத்திரத்தை மத்திய அரசு திருத்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் = ((கடந்த 12 மாதங்களில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)  -115.76)/115.76)x100. மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((கடந்த 3 மாதங்களில் அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)  -126.33)/126.33)x100.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.