ஆஸ்காரின் 10 வருட தடைக்கு வில் ஸ்மித் கூறிய பதில்!

ஆஸ்கர் விருதுகளில் 10 வருடங்களுக்கு கலந்துகொள்ள கூடாது என நடிகர் வில் ஸ்மித்திற்கு அகாடெமி தடை விதித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 03:57 PM IST
  • கிரிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • வில் ஸ்மித் அகாடெமியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
  • 10 ஆண்டு தடையினால் வேறு எந்த விருதையும் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.
ஆஸ்காரின் 10 வருட தடைக்கு வில் ஸ்மித் கூறிய பதில்! title=

சமீபத்தில் நடைபெற்ற 94-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக்கை மேடையில் நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனைத்தொடர்ந்து வில் ஸ்மித் அகாடெமியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்து இருந்தார்.  தற்போது ஆஸ்கார் விருதுகள் அல்லது வேறு எந்த விருதுகள் வழங்கும் விழாவிலும் 10 வருடத்திற்கு வில் ஸ்மித் கலந்துகொள்ள அகாடெமி ஆப் மோஷன் பிக்ச்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் தடை விதித்துள்ளது.  அகாடெமியின் இத்தகைய அதிரடி முடிவை தான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக நடிகர் வில் ஸ்மித் கூறியுள்ளார்.

willsmith

மேலும் படிக்க | வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ’தடை’: உருவ கேலி செய்த கிறிஸ் ராக்குக்கு ’நன்றி’யா? கொதிக்கும் ரசிகர்கள்

கிரிஸ் ராக்கை அறைந்த பின்னர் அவர் பெற்ற ஆஸ்கார் விருது அவருடனே இருக்கும், ஆனால் தற்போது அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 ஆண்டு தடையினால் அவரால் வேறு எந்த விருதையும் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.  பல விருதுகளையும் பெற தகுதியுடைய வில் ஸ்மித்தால் அடுத்து ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வாங்கமுடியாது.   இதனால் அவரின் திறமைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்துவிடாமல் போகும்.

இந்த சம்பவம் குறித்து அகாடெமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 94-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் கடந்த ஆண்டு சாதனை புடைத்திருந்த அனைவரும் அவர்களது மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தனர்.  ஆனால் வில் ஸ்மித் செய்த மோசமான செயலால் பலரது கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டது.  இந்த சம்பவத்தினால் எங்களால் பலரின் உன்னதமான தருணங்களை காட்டமுடியவில்லை, இதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம்.  இது எங்கள் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும்உலகம் முழுக்க பரவியிருக்கும் எங்கள் அகாடெமியை சேர்ந்த குடும்பத்தினர் அனைவர்க்கும் அதிர்ச்சியை அளித்தது.  மேலும் வில் ஸ்மித்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட நாங்கள் மேடையில் இவர் செய்த மோசமான செயலுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை மேற்கொண்டோம்.

அதன்படி எங்கள் அகாடெமியில் ஒரு முடிவை எடுத்தோம், ஏப்ரல்-8ம் தேதியான இன்று முதல் 10 ஆண்டுகள் வரை வில் ஸ்மித் எந்த விருதுகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும்.  மேலும் அந்த அறிக்கையில், இப்படி ஓர் சூழ்நிலையில் அமைதி காத்த நடிகர் கிரிஸ் ராக்கிற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.  அதுமட்டுமல்லாது எங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள், வெற்றியாளர்கள் என அனைவர்க்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இனிவரும் நாட்கள் பாதிப்பை குணப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News