அச்சச்சோ...! ராஷ்மிகா மந்தனாவுக்கு காயம்... சினிமாவில் இருந்து ஷார்ட் பிரேக்!

Rashmika Mandanna: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Jan 10, 2025, 06:41 PM IST
  • ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார்.
  • பாலிவுட்டிலும் ராஷ்மிகா தொடர்ந்து நடித்து வருகி்றார்.
  • தமிழிலில் தற்போது வரை 2 திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்து உள்ளார்.
அச்சச்சோ...! ராஷ்மிகா மந்தனாவுக்கு காயம்... சினிமாவில் இருந்து ஷார்ட் பிரேக்! title=

Rashmika Mandanna Injury: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காயம் காரணமாக அவர் சிறிது காலம் சினிமா சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. அவருக்கு எங்கு காயமேற்பட்டுள்ளது, காயத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

புஷ்பா 2 மெகா ஹிட்

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் வசூல் செய்து பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ராஷ்மிகா தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் மற்றும் பாலிவுட்டிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இவர் ரன்பீர் கபூருடன் நடித்த அனிமல் திரைப்படம் இவருக்கு பாலிவுட்டில் தனியிடத்தை பெற்று தந்துள்ளது. அந்த வரிசையில், புஷ்பா 2 தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் சக்கைப்போடு போட்டுள்ளது.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

பான் இந்திய நடிகை 

பான் இந்திய நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது எனலாம். அந்த வகையில், தற்போது ஏஆர் முருகதாஸ், சல்மான் கானுடன் தற்போது இணைந்துள்ள சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்து வருவதால் இத்திரைப்படம் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

வரிசை கட்டி நிற்கும் படங்கள்

தற்போது ஜிம்மில் ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் நடிக்க இருந்த படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சிறிது காலம் சினிமா சார்ந்த வேலைகளில் ஈடுபட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இத்திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது. மேலும், ராஷ்மிகா 'தாமா' என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் கதாநாயகியாக நடித்த சாவா என்ற திரைப்படம் வரும் பிப்.14ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் லஷ்மண் உத்தேகர் இயக்கி உள்ளார். கதாநாயகனாக விக்கி கௌசல் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கி திரையுலகில் குபேரா, The Girlfriend, ரெயின்போ ஆகிய திரைப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. தமிழில் ராஷ்மிகா மந்தனா சுல்தான், வாரிசு ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தனுஷ், நாகார்ஜூனா ஆகியோர் நடிக்கும் குபேரா திரைப்படம் தெலுங்கில் மட்மின்றி தமிழிலும் வெளியாகிறது.

இப்படி ராஷ்மிகா சூறாவளி வேகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்க தற்போது இந்த காயம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றது சினிமா வட்டாரம்.

மேலும் படிக்க | வணங்கான் vs கேம் சேஞ்சர்! இரண்டில் எது நல்லாயிருக்கு? பொங்கலுக்கு எதை பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News