மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு பிறகு கமலை வைத்து லேகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கினார்.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் ஒரு ரசிகனாக கமல் ஹாசனை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் எனவும், கமலின் முந்தைய படமான விக்ரமையும், தனது முந்தைய படமான கைதி படத்தையும் இந்த விக்ரமில் லாவகமாக இணைத்திருக்கிறார் எனவும் பலர் புகழ்ந்துவருகின்றனர்.
Thank you so much Aandavarey @ikamalhaasan pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
மேலும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் என்ற நிலைக்கு இப்படம் மூலம் லோகேஷ் நகர்ந்திருக்கிறார் என திரையுலகினர் கூறுகின்றனர்.
Ask me questions with #AskDirLokesh pic.twitter.com/IjCx4oTmkG
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 8, 2022
அதுமட்டுமின்றி தனது முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் அவர் இணைத்திருப்பதன் மூலம் லோகேஷ் யுனிவெர்ஸ் என்ற சொல்லாடலும் உருவாகியிருக்கிறது.
Vikram meets Rolex pic.twitter.com/B06RXVC290
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 8, 2022
இந்நிலையில் லோகேஷ் யுனிவெர்ஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “LCU (Lokesh Cinematic Universe) என்பது மக்கள் கொடுத்த பெயர்.
மேலும் படிக்க | திருமணம் முடிந்த கையோடு நயன் - விக்னேஷ் சிவன் அடித்த விசிட்
இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் படங்களின் தொடர்ச்சியாகவோ, அதன் கதாபாத்திரங்கள் தொடர்பாகவோ படம் எடுத்தால் அதில் LCU என்ற பெயரை பயன்படுத்துவேன்” என்றார்.
மேலும் படிக்க | ’ஐயா என ஏன் அழைத்தேன்?’ விஜய் ரசிகர்களுக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR