அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Amaran Audio Launch Chief Guest : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக வரும் நடிகர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2024, 09:18 AM IST
  • அமரன் இசை வெளியீட்டு விழா எப்போது?
  • சிறப்பு விருந்தினர்கள் யார்?
  • படம் அக்டோபர் 31 அன்று வெளியாகிறது
அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?  title=

Amaran Audio Launch Chief Guest : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாக பிசியான செலிப்ரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர், சமீபத்தில் நடித்து முடித்த படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். 

அமரன்:

தமிழ் திரையுலக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அமரன் திரைப்படம். 2019ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலின் போது இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் இன்னுயிர் நீத்தார். அமரன் திரைப்படம், மேஜர் முகுந்தின் வாழ்க்கை படமாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் முகுந்தின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி, முகுந்தின் மனைவியான இந்து ரெபேகா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

இசைவெளியீட்டு விழா:

அனைத்து படங்களுக்கும் இசை வெளியீட்டு விழா நடப்பது, பெரிய ப்ரமோஷனாக அமைந்து வருகிறது. அந்த வகையில் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இந்து ரெபேகா வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பதால் அவரும் இதில் கலந்து கொள்வார் 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?

சிறப்பு அழைப்பாளர்..

அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டுமல்ல, எந்த படத்தின் விழாவாக இருந்தாலும் அதற்கென்று சில சிறப்பு விருந்தினர்களை படத்தின் ப்ரமோஷனிற்காக படக்குழுவினர் அழைக்கின்றனர். அந்த வகையில், அமரன் திரைப்படத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு பிரபல நடிகர் வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா? நடிகர் சிலம்பரசன்தான். கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருந்து, சில ஆண்டுகள் விலகி பின்பு இப்போது கம்-பேக் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இவர் அமரன் படவிழாவில் கலந்து கொள்வது குறித்த தகவல், தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது. 

Amaran Audio Launch

இசை வெளியீட்டு விழா எப்போது? 

அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் 18ஆம் தேதி சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால், மழை காரணமாக இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. படம், இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது. 

சிவகார்த்திகேயன் அமரன் படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஒரு புதுமுக இயக்குநருடன் கைக்கோர்ப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! அவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News