Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் இந்தியன் 3 படத்தின் அப்டேட் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுவரை படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதை தவிர்த்து படம் குறித்த எந்த அப்டேட்களையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது.
பலரை காவு வாங்கிய படம்:
இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்ச்னை கிளம்பியது. முதலில் படத்தின் கதையினால் கமல் ஹாசனுக்கும் ஷங்கருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் படப்பிடிப்பில் சில காலம் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் தயாரிப்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் நடித்த நடிகர்களும் இறந்து போயினர்.
மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…
இந்தியன் 2 ரிலீஸ் தேதி:
இதனிடையே சமீபத்தில் சேனாபதியின் செம டெரர் க்ளோஸப் லுக் வெளியானதுடன் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதனுடன் படத்தில் பாடல் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட இருப்பதாலும் வேறு சில காரணங்களாலும் இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகாது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அதன்படி வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்றும் தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 ட்ரெய்லர்:
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட்டின் படி, இந்தியன் 2 மாற்றும் இந்தியன் 3 படத்தின் ட்ரெய்லர் கட்டுக்கள் தயாராக உள்ளன, இதில் இந்தியன் 2 ட்ரெய்லர் அடுத்த மாதம் மிக பிரமாண்டமாக வெளியிடப்படும், அதனுடன் இந்தியன் 3 ட்ரெய்லர் இந்தியன்2 இன் இறுதியில் இணைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
#Indian2 & #Indian3 trailer cuts are ready
- #Indian2 trailer will be releasing on Next month very grand & it's going to Action packed
- #Indian3 Trailer (Next Part lead) will be Attached at the end of Indian2 movie in theatres with the tentative release date
- Indian2… pic.twitter.com/BHlPfYafzb— AmuthaBharathi (@CinemaWithAB) May 15, 2024
மேலும் படிக்க | தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ