மலையாள சினிமாவின் ஸ்டாராக இருக்கும் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான், திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகளைக் கடந்து விட்டார். சினிமாவில் அறிமுகமான புதியதில் மலையாள சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திய அவர், இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதாவது முதல் 5 ஆண்டுகள் மலையாளத்தில் நடித்த துல்கர், இப்போது பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார்.
மேலும் படிக்க | SK20-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!
தமிழில் இவரது நடிப்பில் அண்மையில் ஹே சினாமிஹா என்ற படம் வெளியானது. மலையாளத்தைப் போல தமிழிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் துல்கர், பான் இந்தியா வார்தையைக் கேட்டாலே எரிச்சலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்மையில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பான் இந்தியா எனக்கூறி படங்களை வெளியிடுவதில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார். தேசிய சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் பேசும்போது, "பான் இந்தியா என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது. இந்த வார்த்தையை கேட்பதற்கு கூட விருப்பமில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களும் அனைத்து மொழிகளிலும் தங்களது திறமைகளை பறிமாறிக்கொள்ளட்டும். ஆனால், நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா படங்கள் என சொல்லப்படுகிறதா?. இந்திய படங்களில் மட்டும் ஏன் பான் இந்தியா படங்கள் என கூற வேண்டும்?
மேலும் படிக்க | பீஸ்ட் படத்துக்கு ஆரம்பித்தது சிக்கல் : தியேட்டரில் ரிலீஸ் இல்லையா?
இந்தியா முழுவதும் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படங்களாக எடுக்கப்படுவதில்லை. அனைத்து மொழிகளுக்குமான படமாக இருக்க முடியாது. ஏதாவதொரு மார்க்கெட்டை குறிவைத்து தான் படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை அனைத்து கலாச்சாரங்களையும் கொண்ட படமாக எடுக்க முடியாது" எனவும் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR