ஏகே 62 போல தளபதி 68 நிலைமை ஆகுமா? அப்செட்டில் வெங்கட் பிரபு?

Thalapathy 68: விஜய் லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jul 6, 2023, 02:34 PM IST
  • தற்போது, ஒன்லைனை சொல்லிதான் வெங்கட் பிரபு விஜய்யிடம் ஒப்புதல் வாங்கியிருக்கிறார்.
  • எனவே கடும் நெருக்கடியில் வெங்கட் பிரபு சிக்கியுள்ளார்.
  • தளபதி 68 படத்திற்கு பின் 2-3 ஆண்டுகள் விஜய் சினிமாவுக்கு பிரேக் என தகவல்.
ஏகே 62 போல தளபதி 68 நிலைமை ஆகுமா? அப்செட்டில் வெங்கட் பிரபு?  title=

Thalapathy 68: வாரிசு படத்தை அடுத்து விஜய் லியோவில் நடித்து வருகிறார். வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் விஜய் எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பெறவில்லை. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் ரேஞ்சுக்கு வாரிசு படம் அமையும் என எதிர்பார்த்த விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதேபோல வாரிசுக்கு முன் வெளியான பீஸ்ட் படமும் தோல்வியடைந்தது. 

இந்த சூழலில், லியோ படத்தை தான் மிகவும் பெரிதாக விஜய் நம்பியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த மாஸ்டர் படம் ஹிட் ஆனதால், லியோ பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பியுள்ளது. திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

டென்ஷனில் வெங்கட் பிரபு?

லியோ படப்பிடிப்பே முடியாத நிலையில், வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 68 பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தளபதி 68 படத்துக்கு சிஎஸ்கே என பெயரிட உள்ளதாக தகவல் வெளியானது. அதோடு நாயகியாக ஜோதிகா நடிப்பார் என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாம் எப்படி வெளியே லீக் ஆகிறது என டென்ஷன் ஆகிவிட்டாராம் வெங்கட் பிரபு. 

மேலும் படிக்க | சலார் படத்தில் நடிக்கும் ராக்கி பாய்? டீஸரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

இந்த தலைவலியோடு மற்றொரு தலைவலியும் இப்போது இணைந்துவிட்டதாம். விஜய்யிடம் ஒன் லைன் சொல்லி தான் ஓகே வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு. அரசியல் பின்புலம், அப்பா - மகன் மோதல் என படத்தின் ஒன் லைன் இருந்த நிலையில், அதை படமாக பில்டப் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாம். அதனால் உதவி இயக்குனர்களை பிரஷர் செய்து வருகிறாராம் வெங்கட் பிரபு. 

நெருக்கடி அதகரிப்பு

ஒருவேளை இந்த ஒன்லைன் படமாகும் போது சரிவரவில்லை என்றால், வெளியே இருந்து கதையை வாங்கி விஜய்யை வைத்து இயக்கவும் படக்குழு தயாராகி வருகிறதாம். கிட்டதட்ட ஏகே 62 படம் போல தான் தளபதி 68-க்கும் நடந்து வருகிறது. விக்னேஷ் சிவன் இப்படித்தான் ஒன்லைன் மட்டும் சொல்லி அஜித்திடம் ஓகே வாங்கியுள்ளார். ஆனால் அவர் அதை படமாக பில்டப் செய்யும் போது அந்த கதை அஜித்துக்கு பிடிக்காமல் போயுள்ளது. 

இதனால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்க மாற்றப்பட்டார். அதேநிலை தளபதி 68 படத்துக்கும் வரக்கூடாது என வெங்கட் பிரபு தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். ஏற்கனவே, அரசியலில் ஆழம் பார்க்க தளபதி 68 படத்துக்குப் பிறகு, 2 அல்லது 3 ஆண்டுகள் சினிமாவுக்கு பிரேக் விட விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் மாஸ் ஹிட் படத்துடன் தான் அவர் பிரெக் எடுப்பார் என்பதால் வெங்கட் பிரபுவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. என்ன தான் நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் விஜய்..? சினிமாவை விட்டு விலகி சட்டமன்ற தேர்தலில் போட்டியா..?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News