ஒரு படத்திற்கு எவ்வளவு தான் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதன் உண்மையான வெற்றியை தீர்மானிப்பது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தான். ஒவ்வொரு படமும் வெற்றிபெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் தயாரிக்கப்படுகிறது, ஆனால் சில படங்கள் முதலீடை கூட எடுக்கமுடியாமல் படுதோல்வி அடைந்துவிடுகிறது, சில படங்கள் வெற்றியடைந்து படத்திற்காக செலவு செய்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான பணத்தை சம்பாதித்து விடுகிறது. இப்போதெல்லாம் படத்தின் தயாரிப்பாளர்களை காட்டிலும், ரசிகர்கள் தான் அவர்கள் ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூலை அள்ளுகிறது என்பது குறித்து ஆர்வமாக இருக்கின்றனர். சில ஹீரோக்களின் ரசிகர்கள் சில படங்கள் பாக்ஸ் ஆபிசில் இவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற செய்தியினை மறுத்து தங்கள் ஹீரோக்களின் படம் தான் வெற்றி பெற்றது என்று கூறி சண்டையிட்டு கொள்கின்றனர்.
மேலும் படிக்க | அடுத்த படத்தில் தனுஷை இயக்கும் நெல்சன்
கொரோனா காலகட்டத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் விஜய் நடித்த 'மாஸ்டர்'. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 8 மாத காலங்களாக காத்திருந்து 50% இருக்கை அனுமதியுடன் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட்டனர். தமிழகத்தில் இப்படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் இப்படம் 34 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 50% இருக்கைகள் இருக்கும்போது எப்படி இந்த படம் இவ்வளவு வசூல் செய்தது, இது போலியான கருத்து என்று சிலர் இணையத்தில் குறைகூறி வந்தனர்.
அடுத்ததாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினியின் 'அண்ணாத்தே' படம் வெளியானது. ஆனால் இப்படம் ரசிகர்களிடமோ, பாக்ஸ் ஆபீஸிலோ சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் இந்த படம் வெளியான முதல் நாளிலே தமிழகத்தில் 34 கோடி ருபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் சிலர் விஜயின் சர்க்கார் படம் படைத்த சாதனையை ரஜினியின் அண்ணாத்தே படம் சாதிக்கவில்லை என்று கூறி இணையத்தில் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய், நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து ஒருவழியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் அஜித்தின் 'வலிமை'. ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 34 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது, இருப்பினும் 2018ம் ஆண்டு வெளியான விஜயின் சர்க்கார் படத்தின் வசூலை ஒப்பிடும்போது இப்படம் குறைவான வசூலை தான் பெற்றுள்ளது என்று ரசிகர்கள் இணையத்தில் சண்டைபோட்டுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான உணர்வுபூர்வமான ஆக்ஷன் கலந்த திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படம் வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது, ஆனால் சூர்யா ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்து படம் கூடுதல் தொகையை தான் வசூல் செய்தது என்று இணையத்தில் ஆராவாரம் செய்தனர்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சங்களை பெற்றது. இந்த படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 38 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் 60 கோடி ரூபாயையும் வசூல் செய்து இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் 'அண்ணாத்தே' மற்றும் 'வலிமை' படத்தை விட குறைவான வசூலை தான் இப்படம் பெற்றதாகக் கூறினர், இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் படிக்க | விக்ரம் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வெளியான தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR