ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?

Actress Shruti Haasan Rajinikanth Movie : நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ரஜினிகாந்திற்கு மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2024, 04:38 PM IST
  • ரஜினிக்கு மகளாகும் ஸ்ருதிஹாசன்
  • எந்த படத்தில் தெரியுமா?
  • கேட்டா ஷாக் ஆயிருவீங்க!
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா? title=

Actress Shruti Haasan Rajinikanth Movie : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர், ரஜினிகாந்தின் மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

பிசியாக இருக்கும் ரஜினிகாந்த்:

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், 73 வயதாகும் வயதிலும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடித்து முடித்த படம், வேட்டையன். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. பிற நடிகர்களின் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் கமிட் ஆன படம், ‘கூலி’. இது, இவரது 171வது படமாகும். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

கூலி படப்பிடிப்பு ஆரம்பம்:

கூலி படத்தின் டைட்டில் டீசர், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், தனது பழைய படத்தில் பேசிய ஒரு டைலாக்கை பேசி அனைவரையும் அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது மட்டுமன்றி, இந்த டீசரை பார்த்ததில் இருந்து, இது ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. 

இந்த டீசரை அடுத்து, லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்துடன் எடுத்த மிரர் செல்ஃபி ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ‘லுக் டெஸ்ட்’ முடிந்து விட்டதாகவும், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார். கூறியது போலவே, கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கும் இந்த படப்பிடிப்பில் விரைவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கூலி படத்தில் 32 வருட பழைய டையலாக்கை பேசிய ரஜினி!

ரஜினியுடன் ஸ்ருதிஹாசன்:

வழக்கமாகவே, இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்களின் மகன்-மகள்களும் கூட விரைவில் சினிமாவிற்குள் நுழைந்து விடுகின்றனர். அப்படி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர், ஏழாம் அறிவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் எந்த காரணத்தினாலோ அந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் சரியாக மார்கெட் இல்லாமல் போனது. இதையடுத்து, தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி. இவர், தற்போது ரஜினிக்கு மகளாக கூலி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கூலி படம், அடுத்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகியுடன் சேர்ந்து நடித்த ஸ்ருதிஹாசன்:

இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜ், ‘இனிமேல்’ ஆல்பம் (பாடல்) மூலம் நடிகராக அறிமுகமானார். இdந்த பாடலின் லிரிக்ஸை கமல்ஹாசன் எழுத, லோகியுடன் ஜோடியாக அதில் நடித்திருந்தார் ஸ்ருதி. இந்த ஜோடியின் கெமிஸ்டிரி ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது. இதையடுத்துதான் ஸ்ருதிஹாசனுக்கு இந்த வாய்ப்பு சென்றிருக்க கூடும் என தகவல்கள் பரவி வருகிறது. 

மேலும் படிக்க | Rajinikanth : மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News