எப்படி இருக்கு வெந்து தணிந்தது காடு?... கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 15, 2022, 07:34 AM IST
  • வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ்
  • படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
  • சிம்புவும்,கௌதம் மேனனும் கம்பேக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்
 எப்படி இருக்கு வெந்து தணிந்தது காடு?... கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள் title=

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் வெந்து தணிந்த காடுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்தப் படமானது உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு!

எதிர்பார்ப்புக்கேற்றார்போல் படம் வெளியானதை சிம்பு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். தியேட்டர்களுக்கு காலை முதல் ஷோ பார்ப்பதற்கு சென்ற அவர்கள் படத்தையும் கொண்டாடிவருகின்றனர்.

 

படம் டெக்னிக்கலாக அருமையாக இருக்கிறது. கதையும், திரைக்கதையும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. கௌதம் மேனனின் தரமான கம்பேக் இது என பலரும் படத்தை பாராட்டுகிண்றனர்.

 

அதுமட்டுமின்றி படத்தில் இடைவேளை விடும் காட்சி கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் எனவும், சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

 

மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறுமென்று படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News