1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல.. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா.. ஜியோ மலிவான திட்டம்!

Jio Recharge Plan: 1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல தினமும் 3 ஜிபி டேட்டா கொண்ட மலிவான திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம். BSNL-க்கு போட்டியாக களம் இறங்கியது. 

Jio Rs.449 Recharge Plan Details: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.500க்கும் குறைவான விலையில் பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தின் அம்சத்தை பார்ப்போம்.

1 /7

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மலிவான திட்டத்தை குறித்து பார்ப்போம்.

2 /7

ஜூலை மாதத்தில், ஜியோ-ஏர்டெல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் தற்போதைய ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. இதன் காரணமாக, பெரும்பாலான திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக ஆனது. 

3 /7

விலையுயர்ந்த திட்டங்களால், பெரும்பாலான பயனர்கள் குறைந்த கட்டணம் ரீசார்ஜ் திட்டங்களை கொண்ட டெலிகாம் நெட்வொர்க்களுக்கு மாறி வருகிறார்கள். 

4 /7

தற்போது ஜியோ நிறுவனம் மலிவான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நீங்கள் ரூ.600-700 செலுத்த வேண்டியதில்லை. ஜியோவின் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்,

5 /7

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை 449 ரூபாய். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். தினமும் 3 ஜிபி டேட்டா என மொத்தம் 84ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். தினசரி டேட்டா முடித்த பிறகு, உங்கள் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

6 /7

டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

7 /7

நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்து, ரூ. 500க்கு குறைவான திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு ஏராளமான டேட்டா உட்பட பால் நன்மைகளை வழங்கும்.