Raghava Lawrence: மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்குகினார். ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் என கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர், நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கு சேவை எண்ணம் தோன்றினால் போதும் என்றும் என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் என அவர் மேடையில் அப்பகுதி பொதுமக்களிடம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் செல்லும் இடத்தில் சில பேர் என்னை அன்னை தெரேசா, எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள்.
இதையெல்லாம் இதயத்தில் வைத்து கொள்வேன். தலையில் வைத்து கொள்ளமாட்டேன் எனவும் விவசாயம் வளர வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்றி சேவை செய்பவர்கள் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த வாரம் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இதே போல கிராம மக்கள் மற்றும் செவிலியர்கள் ஆடி பாடி உற்சாகமாடி உற்சாக வரவேற்பு கொடுத்து இருந்தனர்.
Hi friends and fans,
I handed over the 6th Tractor Through Aranthangi Nisha to pandi family from Pudukkottai district with all your blessings and support. #Maatram #serviceisgod pic.twitter.com/1lttiy1vic— Raghava Lawrence (@offl_Lawrence) May 10, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் மாற்றம் சார்பில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து அவருக்கு கிராம மக்கள் மட்டும் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆடி பாடி உற்சாகமாடி வரவேற்றனர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி என்றும் தெலுங்கில் படம் நடித்தாலும் அவருக்கு நடனம் சொல்லி கொடுப்பேன் என தெரிவித்தார்.
மேலும் அவர் எனது நண்பர் அவர் என்ன செய்தாலும் யோசித்துதான் செய்வார். அவர் என்ன செய்தாலும் அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு என ராகவா லாரன்ஸ் பேட்டியளித்தார். தொடர்ந்து என்னிடம் விதவைப் பெண்கள் தையல் மெஷின் கேட்பதாகவும், விரைவில் முதற்கட்டமாக 500 பேருக்கு தையல் மெஷின் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் மாற்றம் அரசியலுக்கானது அல்ல என்றும் பேட்டியளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ