Actor Saif Ali Khan Stab Case : இந்தி திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர், சயிப் அலி கான். இவரது மும்பை இல்லத்தில், திருடன் புகுந்து இவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இவர் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகருக்கு கத்திக்குத்து..
நடிகர் சயிப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி மும்பையில் உள்ள தனது பாந்தரா இல்லத்தில் குடும்பத்தினர்களுடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 2 மணியளவில், திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்ததை அடுத்து, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சயிப்பை, 6 முறை கத்தியால் குத்திவிட்டு அந்த திருடன் தப்பிஓடியதாக கூறப்படுகிறது. இதில், 2 ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று முதுகுத்தண்டுக்கு அருகில் விழுந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சிகிச்சை:
சயிப் அலி கானை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சயிப் உடன், அவரது மகன் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாகவும் தற்போது வேகமாக குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தமாக செலவான பணம்..
சயிப் அலி கான், தனது சிகிச்சைக்காக செலவு செய்த தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. சயிப், ஏற்கனவே மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருக்கிறார். இவர், 35.95 லட்சத்திற்கு எடுத்திருந்த இன்சூரன்ஸில் இருந்து ரூ.25 லட்சம் இவரது சிகிச்சைக்காக கிடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மேற்கொண்டும் சில ஆயிரங்கள் செலவாகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டவர்கள், இவ்வளவு கம்மி செலவா என சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
பிடிப்பட்ட குற்றவாளி:
சயிப் அலி கானுக்கு இந்த நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், முதலில் குற்றவாளியின் முகத்தை சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டுபிடித்தனர். இதையடுத்து, சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாக பிடித்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் முகம்மத் இஸ்லாம் என்றும், அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 30 ஆவதாகவும், 6 மாதத்திற்கு முன்பு மும்பைக்கு வந்த இவர் தன் பெயரை விஜய் தாஸ் என மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த சயிப் அலி கான்?
நடிகர் சயிப் அலி கானை, தமிழ் மக்கள் பல்வேறு விளம்பரங்கள் மூலம் பார்த்திருப்பர். ஷாம்பூ விளம்பரம், சில இந்தி டப்பிங் படங்களில் முகம் காட்டியிருப்பார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூரின் மகனான இவர், வட இந்தியாவின் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். சிறுவயதிலேயே சினிமாவால் ஈர்க்கப்பட்டு, நடிக்க வந்துவிட்டார். அப்படியே தொடர்ந்து நடித்துக்கொண்டு இருந்த இவர், முதலில் அமிர்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா மற்றும் இப்ரஹிம் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள், 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதையடுத்து 2012ஆம் ஆண்டு நடிகை கரீனா கபூரை மணந்தார். இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளன.
மேலும் படிக்க | 'சைஃப் அலி கான் முதலில் கேட்டது இதுதான்' ஆட்டோ ஓட்டுநர் கூறிய பரபரப்பு தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ