White Hair Problem: இன்றைய சூழலில் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மனஅழுத்தம், உணவு பழக்கம் காரணமாக நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய பல செயற்கை தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் இதன் மூலம் நரை முடி பிரச்சனை சரியாவதில்லை. மேற்கொண்டு முடிக்கு பிரச்சனை தான் ஏற்படுகிறது. சிலர் முடிக்கு டை அடிக்கின்றனர், ஆனால் ஒருமுறை டை அடித்துவிட்டால் தொடர்ந்து அடிக்கும் நிலை உண்டாகிறது. இதனால் இருக்கும் கருப்பு முடியும் நரைமுடியாக மாறுகிறது. அதனுடன் முடியும் சேதமடைகிறது.
மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் அளவை அதிரடியாய் குறைக்கும் சில இயற்கையான வழிகள் இதோ
முடியில் தொடர்ந்து ரசாயனங்களை பயன்படுத்துவதால் முடி சேதமடைவதோடு, முடி கொட்டும் பிரச்சனையும் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே செயற்கை தயாரிப்புகளை அகற்றிவிட்டு இயற்கையான பொருட்களை முடிக்கு பயன்படுத்த வேண்டும். இயற்கை பொருட்களை தொடர்ந்து முடிக்கு பயன்படுத்துவதால் முடியின் ஆரோக்கியம் அதிகமாகிறது, மேற்கொண்டு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. பல இயற்கை சார்ந்த பொருட்களை நரைமுடிக்கு பயன்படுத்தினாலும், மஞ்சள் கூடுதல் நன்மைகளை தருகிறது. உங்கள் முடியை கருப்பாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பச்சை மஞ்சளை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
பச்சை மஞ்சளை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?
மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை முடியை சீக்கிரம் நரைக்க செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பச்சை மஞ்சளை பயன்படுத்தும் போது மன அழுத்தம் குறைகிறது. மஞ்சளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. தினசரி உணவிலும் மஞ்சளை பயன்படுத்துகிறோம். மேலும் மஞ்சளை முடிக்கு பயன்படுத்தும் போது மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இவை நரை முடியை நீக்கி முடியின் கருமை நேரத்தை மீண்டும் கொண்டு வருகிறது. நரைமுடியை சரி செய்வது மட்டுமின்றி தலையை ஆரோக்கியமாகவும், முடி கொட்டும் பிரச்சனையை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மஞ்சளில் உள்ள தாமிரம், இரும்பு மற்றும் பிற மருத்துவ குணங்கள் நரைமுடியை சரி செய்து இயற்கையான கருப்பு நிறத்தை தருகிறது. மஞ்சளை பயன்படுத்தி முடியை கருப்பாக்க ஹேர் மாஸ்க் அல்லது டை பயன்படுத்தலாம்.
மஞ்சளை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரிக்க, சூடான எண்ணையில் சிறிது கடுகு சேர்த்து நன்கு சூடாக்கவும். பிறகு, தேவையான அளவு துருவிய மஞ்சளை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் அப்படியே விடவும், பிறகு மஞ்சள் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். நன்கு சூடு ஆறியவுடன் அதில் காபி, வைட்டமின் ஈ எண்ணெய், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்யவும். இந்த கலவையை நரைமுடி இருக்கும் இடத்தில் நன்கு தடவவும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு முடியை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி பிரச்சனை சரி ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ