அழகுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது போல் முகத்தின் அழகை குறைத்து காண்பிப்பது பருக்கள். அதோடு முகம் பொழிவிழந்து காணப்படுவதும் இளம் பெண்களுக்கு கவலையளிக்கக்கூடிய ஒன்று. இந்த கவலைகளை போக்கும் அருமருந்தாக ஒரு எண்ணெய் செயல்படுகிறது.
சந்தையில் சுலபமாக கிடைக்கும் இந்த எண்ணெய், முகத்தில் உள்ள கறைகளை நீக்குவதோடு, முகத்தில் எண்ணெய்பசையே இல்லாதவாறு தோற்றத்தையும் கொடுக்கும்.
முகத்தில் எண்ணெய் தடவினால் முகப்பரு அதிகமாகுமே என்று நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு. எண்ணெயின் அடிப்படைத்தன்மை பசைத்தன்மை என்றாலும், சில எண்ணெய்கள் சருமத்திற்கு நலம் பயப்பவை.
ஆனால் பொதுவாக பல எண்ணெய்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை கெடுக்கும், சில எண்ணெய்கள் முகப்பருவை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி, சில எண்ணெய் முகத்தில் புள்ளிகளையும் ஏற்படுத்திவிடும். ஆனால், இவற்றை எல்லாம் நினைத்து எண்ணெயை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால், சில எண்ணெய்கள் சருமத்தை மிளிரச் செய்து புத்துணர்வை ஏற்படுத்தி அழகை பேரழகாக்கும் தன்மை கொண்டவை.
Also Read | Post Covid: அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா? இது உங்களுக்கான தீர்வு
அழகுக்கு அழகு சேர்க்கும் எண்ணெய்களில் முக்கியமான எண்ணெய் இது. இந்த எண்ணெய் முகத்தில் உள்ள கறைகளை குறைக்கிறது, முகத்தில் ஏற்படும் மங்கை மங்கிப்போக செய்கிறது. இந்த வித்தியாசமான எண்ணெய், முகத்தில் உள்ள அனைத்துவிதமான புள்ளிகளையும் படிப்படியாக குறைத்து அவற்றை வேரிலிருந்து நீக்குகிறது. ஆயுர்வேதத்திலும், இந்த எண்ணெய் முகத்தில் உள்ள புள்ளிகளை போக்கும் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதிசய எண்ணெயின் பெயர் குங்குமாதி தைலம். இதில் உள்ள இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு போஷாக்கு தருபவை. தினசரி இரண்டு முதல் மூன்று சொட்டுகளை பயன்படுத்தினால் போதும், ஒரு மாதத்தில் உங்கள் அகத்தைப் போலவே முகமும் ஒளிரும்.
முகத்தில் கருமை படிவது, வெயிலில் செல்லும்போது சருமம் பொலிவிழந்து போவது என வழக்கமாக ஏற்படும் சரும பிரச்சனைகளை குங்குமாதி தைலம் நீக்கும். இதை, சூரிய ஒளியைத் தடுக்கும் சன்ஸ்கிரீனாகவும் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது, இரண்டு சொட்டு குங்குமாதி தைலத்தை எடுத்து, கை கால்களில் தடவினால், சூரிய ஒளி உங்களை தழுவாது.
Also Read | White Discharge: வெள்ளைபடுகிறதா? கவலை வேண்டாம், சுலபமான தீர்வு
வயதானாலும், இளமையான பொலில்வான சருமத்தை பெறவும், பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த குங்குமாதி தைலம்.
மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ என சரும நிறத்தை மிளிரச் செய்யும் தன்மை கொண்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது குங்குமாதி தைலம்.
இது, சரும வளர்ச்சிக்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால், முக தசைகள் உறுதி ஆகும். முகத்தின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாய் இருக்கிறது குங்குமாதி தைலம்.
குங்குமாதி தைலம் அழற்சியை எதிர்க்கும் பண்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளை கொண்டுள்ளது. சருமத்தின் மாசுகளையும் குறைக்க உதவுவதோடு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் உடையது. ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது குங்குமாதி தைலம்.
Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!
இந்த எண்ணெய் பயன்படுத்துவது எப்படி? தினமும் இரவில் படுப்பதற்கு முன்னதாக முகத்தை நன்கு கழுவி, துண்டால் மென்மையாக துடைக்கவும்.
மூன்று சொட்டு எண்ணெய் எடுத்துக் கொண்டு, அதை பரு, மங்கு, கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவவும். காலையில் எழுந்து, சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும்.
இது மட்டுமல்ல, பருக்கள் மற்றும் சரும பிரச்சனை உள்ளவர்கள், வறுத்த, பொறித்த, காரமான, பழைய உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்கள் சருமம் நீங்களே விரும்பும் அளவுக்கு பொலிவாக மாறும்.
நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் குங்குமாதி தைலம், உங்கள் மின்னும் அழகுக்கு மலிவான ஆனால் அருமையான சூப்பர் எண்ணெய்….
Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR