Natural Hair Growth Tips: அனைத்தும் விரைவாகவும், வேகமாகவும் நடக்கும் இந்த காலகட்டத்தில் நாம் உணவுமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. மோசமான வாழ்க்கைமுறை மாற்றம், மோசமான உணவுமுறை ஆகியவை உடலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், பலருக்கும் தலைமுடி ஆரோக்கியம் கூட மோசமான நிலைக்குச் சென்றுவிடுகிறது. அந்த வகையில், தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க கறுவேப்பிலை (Curry Leaves) பல வழிகளில் உதவிபுரியம். அப்படி கறுவேப்பிலையை இந்த 5 முறைகளில் பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
நெல்லிக்காய், வெந்தயக்கீரை மற்றும் கறுவேப்பிலை
நெல்லிக்காயில் வைட்டமிண் சி நிறைந்து இருக்கிறது. அதேபோல், வெந்தயக்கீரையில் புரதம் அதிகம் இருக்கிறது. ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கறுவேப்பிலையில் இருக்கிறது. இவை அனைத்தும் முடிவளர்ச்சிக்கு அவசியம். எனவே, அரை கப் கறுவேப்பிலையை எடுத்துக்கொண்டு அதில் சற்று வெந்தயக்கீரை இலையையும், ஒரு நெல்லிக்காயையும் வைத்துக்கொள்ளுங்கள். அதனை நல்ல பேஸ்ட்டாக அரைத்துக்கொண்டு, அதை தலையில் தேய்த்து அரைமணி நேரத்தில் வெந்நீரில் தலைமுடியை அலசினால் நல்ல பயன் தரும்.
மேலும் படிக்க | உடம்பில் இருக்கும் மச்சம் அதிர்ஷ்டமா அல்லது ஆபத்தா? உண்மை இதுதான்
வெங்காய் ஜூஸ் மற்றும் கறுவேப்பிலை
இரண்டு கப் அளவிற்கு கறுவேப்பிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் கால் கப் வெங்காய் சாறை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை தலைமுடியின் வேர் வரை தேய்த்துக்கொண்டால் பொடுகு தொல்லை போகும். அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து அதன்பின் அலசுங்கள். வாரத்திற்கு மூன்று முறை இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிர் மற்றும் கறுவேப்பிலை பேஸ்ட்
ஒரு கப் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் கறுவேப்பிலை பேஸ்ட் இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பின் தலைமுடியின் வேர் வரை நன்கு தேய்க்கவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் தலையை நன்கு அலசுங்கள். தயிரில் உள்ள புரதம், ஈரத்தன்மை மற்றும் கறுவேப்பிலையில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ஸ்ட்கள், வைட்டமிண்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
வேப்ப எண்ணெய் மற்றும் கறுவேப்பிலை
சுத்தமான கறுவேப்பிலையை, வேப்ப எண்ணெய் உடன் கலந்துகொண்டு நன்கு சூடு செய்யுங்கள். அதன்பின் அதனை வடிக்கட்டுங்கள். சூடு தணிந்து நன்கு குளிர்ச்சி அடையும் வரை காத்திருங்கள். அதன்பின் உங்கள் உச்சத்தலையிலும், தலைமுடி முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பூ கொண்டு அலசுங்கள். இதுவும் தலைமுடி வளர்ச்சிக்கு நல்ல பலனை தரும். வேப்ப எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இது தலைமுடியின் வேர் வரை பாதுகாக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கறுவேப்பிலை
தேங்காய் எண்ணெய்யை நன்கு சூடுபடுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் சுத்தமான கறுவேப்பிலையை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். கறுவேப்பிலை நன்கு சுருங்கிய பிறகு, அதனை ஆறவைத்து வடிக்கட்டுங்கள். இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கு். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு மருத்துவம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி வளர்ச்சி குறித்து உரிய மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இனி வெங்காயத் தோலை தூக்கி எறிய வேண்டாம்! இந்த விஷயங்களுக்கு உதவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ