இவர்களுக்கு எப்போதும் பணப்பிரச்சனை வராது

வாழ்க்கையில் ஒரு சிலருக்கு எப்போதும் பணப்பிரச்சனை வராமல் இருப்பதற்கு இவை தான் காரணமாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2022, 09:15 AM IST
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க டிப்ஸ்
  • 3 விஷயங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்
  • சாணக்கியர் சொல்லும் பணப் பிரச்சனைக்கு தீர்வு
இவர்களுக்கு எப்போதும் பணப்பிரச்சனை வராது title=

எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் மாறிமாறி வருவது இயல்பு. இரண்டு பக்கங்களையும் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துக்கத்தில் நீங்கள் பொறுமையாக இருந்தால், கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என சாணக்கியர் நீதி கூறுகிறது. 

1. கடின உழைப்பு

கடின உழைப்பு... கடின உழைப்பு என இருப்பவர்களுக்கு லட்சுமியின் கருணை இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் கடினமாக உழைத்து, பொறுமையை கடைபிடிப்பவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமிருக்காதாம். இந்த குணங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து கொடுக்குமாம். 

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

2. நிதிச்சிக்கல்

கடின உழைப்பாளிகளும் நிதிச்சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அந்த உழைப்பு மூலம் கிடைத்த பணத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அனுபவிக்கிறார்கள். கடின உழைப்பாளிகளுக்கு சமூகத்தில் எப்போதும் அந்தஸ்து இருக்கும் என கூறும் சாணக்கியர், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் இருப்பதில்லை எனக் கூறுகிறார். 

மேலும் படிக்க | அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்

3. சேமிப்பு

சேமிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட தெரிந்திருக்க வேண்டும். இதன்மூலம் அசாதாரண நிதிச் சிக்கல்களை நீங்கள் தவிர்க்கலாம். சிறிய சேமிப்புகள்கூட ஒரு காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார் சாணக்கியர். 

(பின்குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News