GiGi Wu: பிரபல 'பிக்னி ஹிக்கர்' மலை சிகரத்திலிருந்து தவறி விழுந்து பலி...

சமூக வலைதளத்தில் புகழ் பெற்ற கிகி வூ தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் இருந்து தவறி விழுந்து பலி.....

Last Updated : Jan 22, 2019, 06:15 PM IST
GiGi Wu: பிரபல 'பிக்னி ஹிக்கர்' மலை சிகரத்திலிருந்து தவறி விழுந்து பலி... title=

சமூக வலைதளத்தில் புகழ் பெற்ற கிகி வூ தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் இருந்து தவறி விழுந்து பலி.....

தைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (GiGi Wu). இவருக்கு வயது 36.  இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார்.  பின்னர் உச்சிக்கு சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார்.

இதையடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.  இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது.  கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 4 வருடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன். 

என்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன.  அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார். மேலும், அவரிடம் நீங்கள் மலை உச்சிக்கு சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள்? என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது.  அதனை ஏன் விரும்ப கூடாது? என கூறியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ளார்.  அதன்பின் தனது சேட்டிலைட் போனில் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

இதில், 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலின் கீழ் பகுதியை அசைக்க முடியவில்லை என தெரிவித்து உள்ளார்.  அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்தாலும் மீட்ப்புப்படையினரால் அங்கு உடனடியாக செல்ல முடியவில்லை. மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், வானிலை மோசமானதால் 28 மணி நேரத்துக்கு பின்னரே மீட்புக்குழிவினர் அங்கு சென்றனர். மீட்பு படையினர் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.  இந்த நிலையில் அவரது உயிரற்ற உடலை அவர்கள் கண்டனர்.  இதையடுத்து, அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு கொண்டுவந்துள்ளனர்.  

 

Trending News