Salary Hike: பணியாளர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் சம்பளம் மிக அதிகமாக உயரப்போகுது!

Mercer and Aon நடத்திய 26-வது ஊதிய உயர்வு கணக்கெடுப்பில், இந்த ஆண்டு ஊழியர்களின் சம்பளங்கள் கணிசமாக உயரும் என்ற செய்தி வெளியாகியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2022, 07:29 AM IST
  • பணியாளர்களுக்கு சம்பளம் கணிசமாக அதிகரிக்கும்
  • அண்மை ஆய்வு தரும் மகிழ்ச்சியான செய்தி
  • எந்தத் துறையில் மிக அதிகமான சம்பள உயர்வு?
Salary Hike: பணியாளர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் சம்பளம் மிக அதிகமாக உயரப்போகுது! title=

Salary hike news: நீங்கள் வேலையில் இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த ஆண்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வைச் செய்யும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. 

பிடிஐ செய்தியின்படி, இந்த ஆண்டு ஊதிய உயர்வு சராசரியாக 9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் சரிவு ஏற்பட்டது.

தற்போது, மீண்டும் உலகம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது, இது சம்பள உயர்விலும் எதிரொலிக்கும்.

புதன்கிழமையன்று Mercer and Aon நடத்திய 26-வது ஊதிய உயர்வு கணக்கெடுப்பில், இந்த ஆண்டு ஊழியர்களின் சம்பளங்கள் கணிசமாக உயரும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.  

மேலும் படிக்க | IPL 2022 mega auction: ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்

2022ல் அனைத்து தொழில்களிலும் சராசரி சம்பள உயர்வு

988 நிறுவனங்களிடம் ஊதியம் தொடர்பான இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இவற்றின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் நுகர்வோர் பொருட்கள், வாழ்க்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளுடன் தொடர்புடையவை. 

ரிவார்ட்ஸ் கன்சல்டிங் லீடர் இந்தியாவின் மூத்த முதல்வர் மான்சி சிங்கால் கூறுகையில், தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போன்ற சலுகைகளை நிறுவனங்கள் வழங்குவது சாதகமான விஷயம் என்றும், 2022 ஆம் ஆண்டில் தொழில்கள் முழுவதும் சராசரி சம்பள உயர்வு 9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். இது சாதகமான பொருளாதார மற்றும் வணிகப் போக்குகளைக் குறிக்கிறது என்றும் அவர் நம்புகிறார்.  

ஐந்தாண்டு உச்சத்தை எட்டியது

Aon இன் 26 வது ஊதிய உயர்வு கணக்கெடுப்பு, பெருநிறுவன நிதியியல் மற்றும் நேர்மறையான வணிக உணர்வுகளின் வலுவான மீட்சிக்கு மத்தியில் நாட்டின் சம்பள உயர்வு (Salary Hike) இந்த ஆண்டு ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 9.9 சதவீதத்தை எட்டும் என்று கூறியுள்ளது. 

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

கருத்துக்கணிப்பின்படி, நேர்மறையான வணிக உணர்வுகளுக்கு மத்தியில், நிறுவனங்கள் போர்த்திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிப்பதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

2022ல் சம்பள உயர்வு 9.9 சதவீதமாக இருக்கும்

இந்தியாவின் முன்னணி உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான Aon இன் 26 வது சம்பள உயர்வு (Salary Hike) கணக்கெடுப்பின்படி, 2022 இல் சம்பள உயர்வு 9.9 சதவீதமாக இருக்கும் என்று துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நம்புகின்றன. 

2021ல் இது 9.3 சதவீதமாக இருந்தது. 40 க்கும் மேற்பட்ட தொழில்களில் உள்ள 1,500 நிறுவனங்களின் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில், இ-காமர்ஸ் மற்றும் துணிகர மூலதனம், ஹைடெக்/தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு உதவும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News