Pan Aadhaar Link: நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அரசு நீண்ட நாளாக கூறிவருகிறது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிப்பின்படி, முக்கியமான ஆவணத்தை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறுபவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. சிபிடிடி தனது சமீபத்திய ட்வீட்டில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் படி, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசித் தேதி 31.3.2023 ஆகும், இந்த தேதிக்குள் பான் கார்டை இணைக்க தவறும் நபர்களின் பான் கார்டு செயலற்றதாக போய்விடும்" என்று ட்வீட் செய்துள்ளது. இதன்படி ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1, 2023 முதல் செயலிழந்துவிடும்.
As per Income-tax Act, 1961, the last date for linking PAN with Aadhaar is 31.3.2023, for all PAN holders who do not fall under the exempt category, failing which the unlinked PAN shall become inoperative.
Don’t delay, link today! pic.twitter.com/t8UoilnVjQ— Income Tax India (@IncomeTaxIndia) November 18, 2022
மேலும் படிக்க | வீட்டில் தங்கம் இருக்கா? இந்த அளவுக்கு மேல் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்!!
கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விலக்கு வகையின் கீழ் வராத மற்றும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் உடனடியாக இணைத்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. www.incometax.in என்ற இணையதளத்தில் ரூ.1,000 செலுத்தி உங்கள் பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஆதார் மற்றும் பான் இணைப்பு செயல்முறையிலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது பற்றி இங்கே காண்போம்.
1) என்ஆர்ஐ-கள்.
2) இந்தியாவின் குடிமகன் அல்லாதவர்கள்.
3) 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.
4) அசாம், மேகாலயா அல்லது ஜம்மு & காஷ்மீரில் வசிப்பவர்கள்.
மேலும் படிக்க | உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ