திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். இந்த வலம் ஏழு என்ற அடிப்படையில் அமைந்திருக்கும்.
சம்ஸ்கிருதத்தில் ஏழு என்பதை சப்தபதி என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் (Marriage) சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையைச் சொல்கிறான்!
ALSO READ | விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம்
* முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்
* இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்
* மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்
* நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்
* ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்
* ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்
* ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்
இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூசகமமான மனோவியல் விஷயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர் களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டு விடுவோம்.
இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும்.
ALSO READ | Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 07 செப்டம்பர் 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR