Income Tax For Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின்படி மூத்த குடிமக்கள் வருமான வரி செலுத்த வேண்டாம். வருமான வரித்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
2022-23 ஆம் ஆண்டிற்கான வருமான வரி (Income Tax) கணக்கை தாக்கல் செய்ய இன்னும் சில வாரங்களே உள்ளன. வரி வரம்பிற்குள் வரும் அனைத்து நபர்களும் விரைவாக தங்கள் வருமான வரியை (ITR)தாக்கல் செய்ய வேண்டும். எனினும் மக்களுக்கு அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ITR -ஐ தாக்கல் செய்த பின்னரும் அவர்களுக்கு சில சிறப்பு விலக்குகள் வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான வரி அடுக்கு
60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் (Senior Citizens) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் வரி அடுக்கின் (Tax Slab) கீழ் தங்கள் வருமான வரியை செலுத்துகிறார்கள். 60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.
அதாவது ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் அவர்கள் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் சில மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு 5 லட்சம் ரூபாயாக உள்ளது. தங்களது ஓய்வூதியம் (Pension) அல்லது வங்கி வட்டி வருமானம் ஆகியவற்றை மட்டும் நம்பி இருக்கும் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு 5 லட்சம் ரூபாயாக உள்ளது.
அவர்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டாம். எனினும் வேறு வழிகளில் இருந்து அவர்களுக்கு வருமானம் வரும் பட்சத்தில் அவர்கள் ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் வரி சலுகை பெறுவது எப்படி
அட்வான்ஸ் டாக்ஸ் (Advance Tax) செலுத்துவதில் வருமான வரித்துறை (Income Tax Department) மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகளை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு வர்த்தகங்களில் இருந்தோ அல்லது ஏதாவது பணிகள் மூலமாகவோ எந்தவித வருமானமும் வராத பட்சத்தில் அவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட வேண்டியதில்லை. மேலும் வங்கிகளின் சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் பிக்ஸ்டு டெபாசிட்களில் (Fixed Deposit) கிடைக்கும் வட்டி தொகைக்கு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்.
வருமான வரிச் சட்டம் (Income Tax Act) பிரிவு 80DDB இன் கீழ் உடல்நல பாதிப்பு அல்லது நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக மூத்த குடிமக்கள் 1 லட்சம் ரூபாய் வரை விலக்கு கோரலாம்.
இது தவிர ITR 1 அல்லது ITR 4 -இல் வருமான வரி தாக்கல் செய்யும் எண்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் காகித முறையிலும் இதை செய்யலாம். இவர்களுக்கு e-பைலிங் (E-filing) முறை கட்டாயம் இல்லை.
வருமான வரி தாக்கலை செய்வது எப்படி
- மூத்த குடிமக்கள் வருமான வரி தாக்கல் செய்ய முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரி இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் நேரடியாக லாக் இன் செய்யலாம்.
- View Return or Form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதற்குப் பிறகு e-file டேப்பை கிளிக் செய்யவும்.
- அதன் பின்னர் Prepare and Submit ITR என்பதை கிளிக் செய்யவும்
- இங்கு கிளிக் செய்த நீங்கள் உங்கள் ITR தாக்கல் செய்யலாம்.
- இந்த இடத்தில் உங்கள் ஆதார் எண், பேன் அட்டை எண் மற்றும் கேட்கப்படும் பிற தகவல்களை அளிக்க வேண்டும்.
பழைய வரி முறையின் கீழ் உள்ள வரி அடுக்குகள் (Old Tax Regime Tax Slab)
- ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை
ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5%
ரூ.3 லட்சம் வரை - வருமான வரி இல்லை
ரூ.5 லட்சம் வரை வருமானத்தில் - 5%
ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் - ரூ.10,000 மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 20%.
ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் – ரூ.1.10 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 30%
புதிய வரி முறையின் கீழ் உள்ள வரி அடுக்குகள் (New Tax Regime Tax Slab)
ரூ.0 முதல் ரூ.2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு - வரி இல்லை
ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு - 5%
ரூ. 5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு - ரூ.12,500 பிளஸ் 10%
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு - ரூ.37,500 ரூபாய் பிளஸ் 15%
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு - ரூ.75,000 பிளஸ் 20%
ரூ. 12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு - 1,25,000 பிளஸ் 25%
மேலும் படிக்க | வீட்டிலேயே இருந்து ‘இந்த’ சுய தொழில்களை செய்யலாம்! அதிக வருமானம் தரும் ஐடியாக்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ