தபால் அலுவலக சேமிப்பு திட்டம்: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த பதிவில் தபால் அலுவலகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டத்தைப் பற்றி காணலாம். இதில் மூத்த குடிமக்கள் (Senior Citizens) ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10250 சம்பாதிக்கலாம். தபால் அலுவலகத்தின் இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை இங்கே அறியலாம்.
தபால் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் (Post Office SCSS):
வயதான காலத்தில் பணத்திற்காக வேறு யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தால், ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்கு, இள வயதில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது முக்கியம். இதற்கு உதவும் வகையில் அஞ்சல் துறையில் ஒரு மிகப்பெரிய திட்டம் உள்ளது. இதில், ஒருவர் முதலீடு செய்தால், முதலீட்டில் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் பெயர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதில், முதலீட்டாளர்கள் பணத்தை ஒன்றாக டெபாசிட் செய்வதன் மூலம் மிகப்பெரிய வருமானத்தைப் பெறுகிறார்கள். இதன் வருமானம் வங்கி எஃப்டி -ஐ விட அதிகம். இந்த சேமிப்பு திட்டத்தில் தற்போது 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு காலாண்டிலும் மாறும்.
முதியவர்களுக்கான ஒரு சிறப்பு திட்டம்
அஞ்சல் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் (SCSS) திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இதனுடன், இந்த திட்டம் விஆர்எஸ் எடுத்தவர்களுக்கும் பொருந்தும். தற்போது இத்திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஒரே முறையில் வெறும் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்து, ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்க முடியும். வட்டியில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு திட்டம் NPS கணக்கை யார் துவங்கலாம்? தொழிலாளி To முதலாளி
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
ஒன்றாக டெபாசிட் செய்யப்படும் பணம்: ரூ. 5 லட்சம்
வைப்பு காலம்: 5 ஆண்டுகள்
வட்டி விகிதம்: 8.2%
முதிர்வுத் தொகை: ரூ.7,05,000
வட்டி வருமானம்: ரூ 2,05,000
காலாண்டு வருமானம்: ரூ 10,250
அஞ்சல் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் -இல் உள்ள பல நன்மைகள்:
- இந்த சேமிப்பு திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது.
- முதலீட்டிற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
- வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறுகிறார்கள்.
- இந்த தபால் அலுவலகத் திட்டத்தின் கணக்கை நாட்டில் உள்ள எந்த மையத்திற்கும் மாற்றலாம்.
- இத்திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும்.
எஸ்சிஎஸ்எஸ் கணக்கை எவ்வாறு திறப்பது?
இந்த கணக்கை திறக்க, ஏதேனும் தபால் அலுவலகம் (Post Office) அல்லது அரசு/தனியார் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்றிதழ் மற்றும் பிற KYC ஆவணங்களின் நகல்களை படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் திறப்பதன் நன்மை என்னவென்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் பெறப்பட்ட வட்டியை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? விதியை மீறினால் 137% அபராதம்!! உஷார்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ