SBI UPI Limit: டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகள் செய்யும் போக்கு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. UPI மூலம் பணமில்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனைகள் மக்களுக்கு எளிதாகவும் ஆபத்தற்றதாகவும் உள்ளன. ஆகையால் இதை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் தங்கள் சிறிய மற்றும் பெரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய டிஜிட்டல் கட்டண முறைகளையே விரும்புகிறார்கள். UPI பரிவர்த்தனைகள் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், அடிக்கடி ATM கள் மற்றும் கார்டுகளுக்கு ஏற்படும் தேவைகளையும் குறைத்துள்ளன. இருப்பினும், டிஜிட்டல் கட்டணங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது சில நேரங்களில் நிதி ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். ஆகையால் இவற்றில் அதிக கவனம் தேவை.
State Bank of India
இதை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்கள் செய்யும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க, பாரத ஸ்டேட் வங்கி (SBI) UPI -க்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 UPI பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த வரம்பை நீங்கள் நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பினால், SBI இல் தங்கள் UPI பரிவர்த்தனை வரம்பை மாற்றலாம். SBI UPI பரிவர்த்தனை வரம்பு என்றால் என்ன? எஸ்பிஐ யுபிஐ வரம்பை எவ்வாறு மாற்றுவது? இது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
What is SBI UPI Transaction Limit? SBI UPI பரிவர்த்தனை வரம்பு என்றால் என்ன
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான UPI வரம்பை ரூ.1,00,000 என நிர்ணயித்துள்ளது. இது அனைத்து UPI செயலிகளுக்கும் பொருந்தும். அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கள் SBI கணக்கிலிருந்து எவருக்கும் ஒரே நேரத்தில் ரூ.1,00,000 வரை பணம் அனுப்பலாம். இது தவிர, வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 10 UPI பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்ய அனுமதிப்பதில்லை.
இருப்பினும், SBI மாதாந்திர அல்லது வருடாந்திர UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. அதாவது, வாடிக்கையாளர்கள் ஒரு மாதம் அல்லது வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
UPI Transaction Limit: UPI பரிவர்த்தனை வரம்பை மாற்றுவது எப்படி?
வாடிக்கையாளர்கள் தங்கள் SBI கணக்கில் UPI வரம்பைத் தனிப்பயனாக்க விரும்பினால், SBI YONO செயலி மூலம் அதை செய்து கணக்கை நிர்வகிக்கலாம். SBI UPI பரிவர்த்தனை வரம்பை மாற்றுவதற்கான வழிமுறையை இங்கே காணலாம்:
- முதலில் SBI நெட் பேங்கிங் அல்லது YONO செயலியில் லாக் இன் செய்யவும்.
- ‘UPI Transfer’ ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.
- ‘Set UPI Transaction Limit’ -க்கு செல்லவும்.
- உங்கள் இணைய வங்கி கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- தற்போதைய UPI வரம்பைப் பார்த்த பிறகு, புதிய வரம்பை உள்ளிடவும்.
- தற்போதைய வரம்பு ரூ. 1,00,000 ஆக இருந்தால், அதை அதிகரிக்க முடியாது.
- ஆனால், அதை குறைக்க முடியும்.
- புதிய வரம்பை உள்ளிட்டு ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- OTP சரிபார்ப்புக்குப் பிறகு புதிய வரம்பு அமைக்கப்படும்.
மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த நாளில் வருகிறது: இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ