wolves and full moon truth : காட்டு விலங்கான ஓநாய் ஒரு ஆபத்தான விலங்கு. அது வைக்கும் பொறியில் சிக்கும் விலங்கு, மனிதன் என யாராக இருந்தாலும் சின்னாபின்னம் தான். அதேநேரத்தில் ஓநாய் பல கட்டுக்கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. பௌர்ணமி நாளில் ஓநாய் ஊளையிடும். அந்த ஊளைக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் இதுதான் என்றெல்லாம் பலபல கதைகள் ஊருக்கு ஏற்றவாடி ஓடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதில் இருக்கும் உண்மை என்ன? என்பதை பார்க்கலாம்.
ஓநாய்கள் இரவில் ஊளையிடுவது ஏன்?
ஓநாய்கள் ஊளையிடுவதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. மற்ற ஓநாய்களுடன் தொடர்பு கொள்ளவும், ஆபத்தை எச்சரிக்கவும், இனச்சேர்க்கையின்போதும் ஓநாய்கள் ஊளையிடுகின்றன. ஓநாய்கள் தங்கள் கூட்டிலிருந்து பிரிந்தவுடன், அவை மீண்டும் தங்கள் கூட்டத்துடன் ஒன்றிணையவே பெரும்பாலும் ஊளையிடும். ஆனால் ஓநாயின் இந்த ஊளையிடுதலை பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஓநாய்கள் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து செல்லவே செல்லாது. ஒருவேளை தவறாக சென்றுவிட்டால் ஊளை மூலம் கூட்டத்தை கண்டுபிடித்துக் கொள்ளும்.
நிலாவைப் பார்த்து ஓநாய் ஊளையிடுவது ஏன்?
ஓநாய்கள் நிலாவைப் பார்த்து ஊளையிடும் என்பது தவறான கருத்து. ஓநாய்கள் எப்போது ஒலி எலுப்பும்போது மேலே பார்த்துதான் சத்தமாக ஊளையிடும். இதனை பார்ப்பவர்கள் அது நிலாவைப் பார்த்து ஊளையிடுகிறது என தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். ஓநாய் நிலவை பார்த்து ஊளையிடும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை தான். உண்மையில் அப்படியான கதைகள் எதையும் யாரேனும் உங்களிடம் சொன்னால் நம்பவே நம்பாதீர்கள். ஓநாய் மந்திரம், மை மாந்திரீகம் என்று கதை விட்டு காசு பார்ப்பவர்களும் உண்டு. அவர்களை நம்பினால் குடும்ப நிம்மதியும் போய், காசு பணத்தையும் இழந்து நிற்க வேண்டியிருக்கும். இதபோன்ற கட்டுக் கதைகள் எல்லாம் மக்களை தவறாக வழிநடத்தி, அதனை வைத்து சந்தர்ப்பவாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
காட்டில் இருக்கும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தனிப்பட்ட தன்னியல்புகள் இருக்கின்றன. அவை படைப்புக்கு ஏற்ப ஐந்தறிவு,ஆற்றிவு கொண்டவையாக இருக்கின்றன. மனிதர்களைப்போல் பகுத்தறியும் சிந்தனை விலங்குகளிடம் கிடையாது. ஆனால் சிலர் உண்மைக்கு புறம்பான கற்பிதங்களை மக்களிடையே விதைத்து, அதனை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என அறிவியல் மற்றும் வரலாறு அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விழிப்போடு இருப்பதே ஆறறிவுள்ள மனிதர்களுக்கு அழகு.
மேலும் படிக்க | மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் வீணாவது தடுக்க டிப்ஸ்! ஒரு மாதம் கேஸ் 2 மாதம் வரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ