புதுடெல்லி: சி.டி.இ.டி 2019 க்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வை முடிவை சி.பி.எஸ்.இ. அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in. அல்லது ctet.nic.in இல் காணலாம்.
கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.
2019 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடைபெற்ற, இந்த தேர்வு 97 வெவ்வேறு நகரங்களில் 20 வெவ்வேறு மொழிகளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 29.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
2019-க்கான சி.டி.இ.டி முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ.யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in. அல்லது ctet.nic.in இல் காணலாம்.
எப்படி பார்ப்பது..?
1. முதல் cbseresults.nic.in. அல்லது ctet.nic.in இன் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
2. இங்கே CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) JULY - 2019 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அங்கு உங்களிடம் ரோல் எண் கேட்கப்படும்.
4. ரோல் எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
5. எதிர்காலத்திற்காக தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
இந்த ஆண்டு மொத்தம் 3.52 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில், முதல் தாள் மட்டும் எழுதியவர்கள் 2.15 லட்சமும், இரண்டாம் தாளும் எழுதியவர்கள் 1.37 லட்சமும் ஆகும். தாள்-1 தேர்ச்சி பெற்றவர்கள் 1-5 வகுப்பு ஆசிரியர்களாக ஆகலாம், அதே சமயம் தாள்-2 தேர்ச்சி பெற்றவர்கள் 6-8 வரை ஆசிரியர்களாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.