ஆதார் ஜெராக்ஸ் கொடுப்பதால் காத்திருக்கும் ஆபத்து

ஆதார் ஜெராக்ஸ் கொடுப்பதால், உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் ஆவணங்கள் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 11, 2022, 08:02 PM IST
ஆதார் ஜெராக்ஸ் கொடுப்பதால் காத்திருக்கும் ஆபத்து  title=

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் பொது அடையாளமாக ஆதார் அட்டை மாறியுள்ளது. இதில் ஒருவரின் கருவிழி, கை ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆவணத்தைக் கொண்டு இந்தியாவில் எந்த மூலையிலும் ஒருவரின் அடையாளத்தை கண்டுபிடித்துவிட முடியும். இதற்காகவே பல்வேறு அரசு சலுகைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஆவணத்தை வைத்து சில மோசடிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சமூகவிரோதிகளால் திருடப்படும் ஆதார் ஆவணங்கள் உங்களை மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால், எங்கு ஆதார் கொடுக்கிறீர்கள், எத்தகைய ஆதாரை கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். உதாரணமாக, ஆதாரில் எண் அனைத்தும் தெரியக்கூடிய ஆதார் அட்டையை கொடுக்காமல், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே தெரியும் ஆதாரை ஆவணமாக கொடுப்பது உங்களுக்கு நல்லது. இதன்மூலம் உங்களின் தனிப்பட்ட ஆதார் ஆவண ரகசியங்கள் காக்கப்படும்.

ஆனால் அந்த ஆதாரை கொடுக்காமல் அனைத்து ஆதார் எண்ணும் தெரியக்கூடிய ஆதார் அட்டையை ஆவணமாக கொடுப்பது நல்லதல்ல. மத்திய அரசும் இதைதான் வலியுறுத்துகிறது. பொதுஇடங்களில் ஆதார் அட்டையை அல்லது அதன் ஜெராக்ஸை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மாஸ்க்டு ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்தவே மத்திய அரசு அறிவுறுத்துகிறது. மேலும், கம்ப்யூட்டர் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதார் கார்டை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்வது நல்லதல்ல.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News