செவ்வாய் ராகுவின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு விபரீதம்: எச்சரிக்கை தேவை

Angaraka Yogam: ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் இரத்தம், ஆற்றல் மற்றும் போர் போன்றவற்றின் கிரகம் ஆகும். செவ்வாய், தோஷ கிரகத்துடன் இணையும் போது அங்காரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2022, 02:39 PM IST
  • ராகு ஒரு பாவ கிரகமாக கருதப்படுகிறது.
  • செவ்வாய் மற்றும் பாவ கிரகங்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகும்.
  • அங்காரக் யோகத்தின் தாக்கத்தால் பொதுவாக கோவம் அதிகரிக்கிறது.
செவ்வாய் ராகுவின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு விபரீதம்: எச்சரிக்கை தேவை title=

ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றவுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி, சனிக்கிழமை, செவ்வாய் பெயர்ச்சியாகிறது. இந்த நாளில் செவ்வாய் மதியம் 2:46 மணிக்கு மகர ராசிக்குள் நுழையும். 

மகரம் செவ்வாய் கிரகத்தின் உயர்ந்த ராசியாக கருதப்படுகிறது. செவ்வாய் சுப கிரகங்களுடன் இணையும் போது சுப மற்றும் நன்மை தரும் யோகம் உருவாகும். மறுபுறம், செவ்வாய் அசுப அல்லது பாவ கிரகத்துடன் இணைந்தால், ஆபத்தான யோகம் உருவாகிறது. பிப்ரவரி 26 அன்று ஆபத்தான யோகம் உருவாகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த ராசியில் அங்காராக யோகம் உருவாகும்

ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய், தோஷ கிரகங்களான ராகு அல்லது கேதுவுடன் இணையும்போது அங்காராக் யோகம் உண்டாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. தீய கிரகமான ராகு தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். கேது விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனுடன், ராகுவின் பார்வை மகர ராசியின் மீதும் உள்ளது. இந்த ராசியில் தான் சஞ்சரிக்கப் போகிறார்.

அங்காரக யோகத்தின் பலன்

ஜோதிட சாஸ்திரத்தின்படி அங்காரக யோகத்தால் மனிதனின் சுபாவத்தில் உக்கிரம் உண்டாகும். கோபமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அங்காரக யோகத்தின் தாக்கத்தால் தொட்டதற்கெல்லாம் கோவம் வருகிறது. இது தவிர, சில சமயங்களில் இவர்கள் வன்முறையிலும் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். 

செவ்வாய் கிரகம் கொடூரமான கிரகத்தின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த கிரகம் ராகுவுடன் இணைந்தால், அந்த தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்குகிறார். அங்காரக யோகத்தின் போது, ​​நெருப்பு மற்றும் வாகனப் பயன்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேலும், வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இதைத் தவிர குடும்பத்தில் மூத்த சகோதரர்கள் மனம் புண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | Mars Transit: செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

அங்காரக யோகத்திலிருந்து தப்பிக்கும் பரிகாரங்கள்

- பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.

- அங்காரக யோகத்தின் போது தவறான சகவாசத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

- சிவபெருமானையும் ஆஞ்சனேயரையும் வணங்க வேண்டும். மேலும், மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

- எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

- குடும்ப உறுப்பினர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

- எந்தவொரு போதைப் பொருட்களையும் உட்கொள்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

- அங்காரக யோகத்தின் போது, ​​'ஓம் அங்கார்காய நம' என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறை உச்சரிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சூரியன் குரு: இந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News