Anchor Bhavana Tips To Be Fit : தற்போதைய காலத்தில் பலர் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும். பரபரவென ஓடிக்கொண்டே இருப்பதால் அதற்கு நேரமில்லாமல் போகிறது. அதிலும், 30 வயதுக்கு மேல் ஆனவர்கள் கண்டிப்பாக தங்களின் உடலை பாதுகாத்துக் கொள்வது அவசியம். இதற்காக தெரிய மாற்றங்களை செய்ய முடியவில்லை என்றால், தினந்தோறும் சிறு மாற்றங்களை செய்து கொண்டாலே போதும். இதுகுறித்து பிரபல தொகுப்பாளர் பாவனா பேசி இருக்கிறார்.
பாவனா:
15 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தலை காட்டி வருபவர் பாவனா. ஐபிஎல் நிகழ்ச்சிகளில் இவர் தொகுத்து வழங்குவதை பார்த்திருப்போம். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவர், மெல்லிய உடலுடன் தனது எடையையும் கூடாமல் பார்த்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உடற்பயிற்சி:
தன் உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்ததாக கூறும் பாவனா, உடற்பயிற்சி ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியம் என்கிறார். மேலும், வாரத்தில் நான்கு நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
இதனால் ஏற்படும் பலன்:
உங்கள் உடல் ஸ்டாமினா அதிகரித்து தசை இறுக காரணமாக இருக்கும். கொழுப்பை குறைத்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதய நலனை பாதுகாத்து உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆக்டிவான லைஃப்:
உடலை சரியாக கவனிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஆக்டிவான லைஃபையும் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறார் பாவனா. உதாரணத்திற்கு ஐந்து மாடிகள் ஏறி ஓரிடத்திற்கு போக வேண்டும் என்றால் லிப்டை உபயோகிக்காமல் படியை மட்டும் பயன்படுத்தலாம் எனக்கு கூறுகிறார். அதேபோல போனில் யாருடனாவது பேசும்போதும் அமர்ந்து கொண்டு அல்லது படுத்துக்கொண்டு பேசாமல் நடந்து கொண்டே பேசுங்கள் என கூறுகிறார்.
இதனால் ஏற்படும் பலன்:
படி ஏறுவதால் உங்கள் இதய துடிப்பு அதிகரித்து இதயத்தை சுற்றி இருக்கும் இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கலாம்.
தினமும் படியேறுவது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய் அபாயத்தை தடுக்கலாம்.
படி ஏறும் போது உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் மல மல குறைந்து உடல் எடையை குறைக்கவும் உதவலாம்.
படி ஏறுதல், கால் தசைகளை வலுவாக்கி உங்கள் உடலை தாங்கும் கால்கள் வலுவாக வைத்திருக்க உதவும்.
வயதான பின்பு வரும் மூட்டு வலி அபாயத்தை தடுக்க, தினமும் படியேறி பழகலாம்.
சாப்பிட்டபின்..
ஒரு நாளில் நீங்கள் பெரிய உணவை சாப்பிட்டு பிறகு அப்படியே உட்கார்ந்து இருக்காமல், 15 முதல் 20 நிமிடங்கள் நடை பயிற்சி செய்யலாம் எனக் கூறுகிறார் பாவனா.
இதனால் ஏற்படும் பலன் என்ன?
சாப்பிட்ட பின் நடை பயிற்சி மேற்கொள்வதால் நாம் சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும். இது வயிறு உப்புசமாவதையும் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை இது குறைப்பதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது. இதனால் மன அமைதி ஏற்படுவதோடு மன அழுத்தமும் குறைந்து மனநலனும் நன்றாக இருக்குமாம்.
சாப்பிடும் உணவுகள்:
பாவனா, உடல் எடையை ஏறாமல் வைத்திருக்க சில குறிப்பிட்ட உணவுகளையும் சாப்பிடுவாரம். தான் சாப்பிடும் உணவுகளில் அனைத்து வேளேயுமே புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சதை எடுத்துக் கொள்கிறாராம்.
ப்ரோ பயோடிக் உணவுகளை தனது டயட்டில் சேர்த்திருக்கும் இவர், தயிரை மறக்காமல் சாப்பிடுவதாக கூறியிருக்கிறார்.
தனது காலை உணவில் அதிக புரதம் இருக்க வேண்டும் என விரும்பும் இவர் அதனுடன் நிறைய பழங்களை எடுத்துக் கொள்வதாகவும், எங்கு சென்றாலும் தனது டயட்டை விட்டுக் கொடுப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் எங்கு சென்றாலும் ஒரு ஆப்பிளை கையில் எடுத்து செல்வது நல்லது என்றும் சொல்கிறார்.
மேலும் படிக்க | 18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுத்த 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்!
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ