பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன அருண்-தீபக்! இருவரில் யாருக்கு சம்பளம் அதிகம்?

Bigg Boss 8 Arun And Deepak Salary: மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து அருண் மற்றும் தீபக் ஆகியோர் டபுள் எவிக்‌ஷனில் வெளியேறி இருக்கின்றனர். இவர்களின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம். 

Bigg Boss 8 Arun And Deepak Salary: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 8. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இறுதிக்கட்டத்தை எட்டி வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம், டபுள் எவிக்‌ஷன் நடந்திருக்கிறது. இதில், அருண் பிரசாத் மற்றும் தீபக் வெளியேறி இருக்கின்றனர். இவர்கள், பிக்பாஸ் 8 இல்லத்தில் இருந்த வரை பெற்ற சம்பளம் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.

1 /7

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து, இந்த வாரம் இதில் டபுள் எவிக்‌ஷன் நடந்தது.

2 /7

இந்த வாரம் நடந்த எவிக்‌ஷனில், தீபக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட இவர்கள் எதிர்பாரா விதமாக எவிக்ட் ஆகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

3 /7

தீபக், இறுதிப்போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். 

4 /7

அருண் பிரசாத், மொத்தம் 98 நாட்கள் இருந்திருக்கிறார். இவர், முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் ஆவார். 

5 /7

தீபக்கும், அதே போல 99 நாட்கள் பிக்பாஸ் 8 இல்லத்தில் இருந்திருக்கிறார். இவர்களின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. தீபக், ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 

6 /7

அருண், ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

7 /7

இந்த சம்பள விவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.