இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவா பாடலை வெளியிட்ட பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரை போற்றும் விதத்திலும், அதேவேளையில் அவரின் வழியில் நாம் செல்லுகிறோமா? என்ற கேள்வியுடன் "தலைவா" என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2019, 01:07 PM IST
இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவா பாடலை வெளியிட்ட பா.ரஞ்சித் title=

இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, இன்று உலகம் முழுவதும் அவருக்கும், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். நாட்டிற்கு டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பு அபாரமானது. 

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14வது குழந்தையாக பிறந்தார். சாதி மற்றும் மதத்தை பெரிதும் வெறுத்தார். சாதி மற்றும் மதத்தால் ஒருவனும் முன்னேற முடியாது என ஓங்கி முழங்கினார். பொதுச்சமூகத்தின் முன்னேற்றத்திற்குத்தான் அதிகம் பங்களித்திருக்கிறார். ஆனால் இன்று இவரை ஒரு தலித் தலைவராக இந்த சமூகம் பார்க்கிறது. இது மிகவும் வேதனையான விசியம். 

அவர் எதற்காக உழைத்தாரோ, எதை அடியோடு நீக்க வேண்டும் என பாடுபட்டாரோ, அது இன்று நீங்கியதா? அவரின் உழைப்புக்கு வெற்றி கிடைத்ததா? இதோ இயக்குனர் பா.ரஞ்சித், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரை போற்றும் விதத்திலும், அதேவேளையில் அவரின் வழியில் நாம் செல்லுகிறோமா? என்ற கேள்வியுடன் "தலைவா" என்ற பாடலை வெளியிட்டுள்ளார். 

அந்த பாடல் உங்களுக்காக......!!

 

Trending News