கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் "சுகாதார வீரர்களுடன்" ஒற்றுமையை வெளிப்படுத்த தங்கள் வெளிப்பாட்டை காட்ட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அளித்த அழைப்பின் பேரில் கோலி இந்திய மக்களை இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு அகல் விளக்கு, மெழுகு ஒளியை ஒளிரச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "அரங்கத்தின் சக்தி அதன் ரசிகர்களிடையே உள்ளது. இந்தியாவின் ஆவி அதன் மக்களிடையே உள்ளது. இன்றிரவு இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு உலகிற்கு காண்பிப்போம், நாங்கள் ஒருவராக நிற்கிறோம் என. நமது சுகாதார வீரர்களுக்கு காண்பிப்போம், நாம் பின்னால் நிற்கிறோம் என." என்று குறிப்பிட்டுள்ளார்.
The power of the stadium is in its fans.
The spirit of India is in its people.Tonight 9pm for 9min
Let’s show the world, we stand as ONE.
Let’s show our Health Warriors,
We stand behind them.
Team India - IGNITED.@narendramodi @PMOIndia— Virat Kohli (@imVkohli) April 5, 2020
முன்னதாக COVID-19 க்கு எதிரான போரில் மற்றொறு முயற்சியாக, ஒரு வீடியோ செய்தியில், ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தங்கள் வீடுகளில் அனைத்து விளக்குகளையும் அணைக்கும்படியும், ஒவ்வொருவருக்கும் ஒற்றுமையைக் காட்ட 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல் விளக்கும் மற்றும் டார்ச்சுடன் தங்கள் வீட்டில் நிற்கும்படி பிரதமர் குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் 'ஜனதா ஊரடங்கு உத்தரவு' அனுசரிக்கப்பட்ட நாளான மார்ச் 22 அன்று நடைபெற்ற 'தாலி, தாலி' நிகழ்வைத் தொடர்ந்து இந்த நிகழ்வு தற்போது நடைபெறவுள்ளது.
Anushka and I are pledging our support towards PM-CARES Fund & the Chief Minister's Relief Fund (Maharashtra). Our hearts are breaking looking at the suffering of so many & we hope our contribution, in some way, helps easing the pain of our fellow citizens #IndiaFightsCorona
— Virat Kohli (@imVkohli) March 30, 2020
இதற்கிடையில் கோலி தனது மனைவி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோருடன் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதி (மகாராஷ்டிரா) ஆகியவற்றிற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தார். இந்நிலையில் தற்போது பிரதமரின் வேண்டுகோள் படி நடத்துக்கொள்ளுமாறு தற்போது நாட்டு மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.