மும்பை சாலையில் ஏற்பட்ட குழிகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எம்என்எஸ் தொழிலாளர்கள் மந்திராலய சாலையை சேதபடுத்தி போட்டம்.
மும்பை: கோபத்தில் எம்.எஸ்.எஸ் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிக்கொணர்வதற்கு மந்திராலாவுக்கு வெளியே பக்கச்சுவர்களை தாக்கினர். மேலும், நகரத்தின் சாலைகளையும் நேற்று (திங்கட்கிழமை) இரவு கடுமையாக தாக்கி சேதமாக்கினர். இதில், நான்கு பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றதோடு போக்குவரத்தும் பெரும் பாதிப்படைந்துள்ளது. மும்பையில், கடந்த இரண்டு வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்குகிறது. மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் போக்குவரத்தும் கண்டினமாக இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பல அரசியல் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அனால், அதற்கான ஒரு பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பெரும் கோபத்திற்கு உள்ளான எம்.எஸ்.எஸ் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை தங்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கோவத்தின் வெளிப்பாடாக அவர்கள் ஆயுதனகளை கொண்டு மந்திராலாவுக்கு வெளியே உள்ள நடைபாதையை சேதப்படுத்தினர்.
To protest against potholes in Mumbai, MNS workers break road in front of Mantralayahttps://t.co/drWA5H3F8A pic.twitter.com/WAT3RSGe42
— Zee News (@ZeeNews) July 17, 2018
இவர்களின் பின்னால் இருந்து ஒருவர் தேசிய கோடியை அசைக்கிறார். இதையடுத்து, உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் இறுதியில் அவர்களின் முரட்டுத்தனத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் நான்கு பேரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.