தென் இலங்கை மற்றும் அதனை சுற்றி உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானத நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் லட்சதீவை நோக்கி நகரக் கூடும். எனவும் இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின் படி ;- வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து சென்னையில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்துள்ளது.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாலை, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது.
திருவாரூர் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க்கப்பட்டுள்ளது.