உ.பி., தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Last Updated : Jun 13, 2018, 08:56 AM IST
உ.பி., தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்! title=

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. 

 

 

முதற்கட்ட தகவல்களின் படி, வேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News