கேரளா மக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் -கேரள CM...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என கேரளா முதலவர் அறிவிப்பு.....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2018, 11:56 AM IST
கேரளா மக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் -கேரள CM... title=

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என கேரளா முதலவர் அறிவிப்பு.....! 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 483 பேர் பலியாகியுள்ளதாகவும், 305 நிவராண முகாம்களில் 59,296 பேர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவெடுக்கப்படும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நிவாரண நிதியாக 738 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது" என்று கேரளா முதலவர் பினரா விஜயன் தெரிவித்துள்ளார்.

தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.

இதை தொடர்ந்து, நேற்று துவங்கிய வெள்ள பாதிப்பு தொடர்பான கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இரண்டாவது நாளாக தொடக்கி நடைபெற்று வருகிறது. அதில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள்  தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் வட்டியின்றி ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையில் நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்ந்துள்ளது. 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர். குழந்தைகள், பொதுமக்கள் உள்பட நிதி வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

 

Trending News