மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 11, 2025, 05:17 PM IST
  • மாரடைப்பால் உயிரிழந்த 8 வயது சிறுமி
  • பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
  • போலீஸார் விசாரணை..
மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.. title=

8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : சமீப சில காலங்களாக, வயதானவர்கள் மட்டுமன்றி இளம் வயதில் இருக்கும் பலர் கூட, இதய நோய் காரணமாக உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது இளைஞர் பலி, நடனமாடிக்கொண்டிருந்த நபர் பலி என நாளிதழை திறந்தாலே இப்படி ஏதேனும் ஒரு செய்தி கண்களில் பட்டு விடுகிறது. இந்த இதய நோய் பிரச்சனைக்கு வயதானவர்கள் பலியானால் நமக்கு பெரிதும் ஆச்சரியம் ஏற்படுவதில்லை. ஆனால், இளைஞர்கள் அல்லது குழந்தைகள் யாரேனும் பலியானால் தூக்கி வாரி போடும் அளவிற்கு பயம் ஏற்படுகிறது. அது பாேன்ற ஒரு சம்பவம்தான் தற்போது அறங்கேறியிருக்கிறது. 

சிசிடிவி காட்சிகள்:

குஜராத்தின் அஹமதாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. வஸ்திராபூர் எனும் இடத்தில் தனது தாத்தா-பாட்டியுடன் தங்கி வந்துள்ளார், 3ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி. இவரது பெற்றோர் மும்பையில் வசித்து வந்துள்ளனர். 

ஜனவரி 11ஆம் தேதியான இன்று காலை அந்த சிறுமி பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறார். அப்போது, பள்ளியின் வராந்தாவிற்குள் நுழைந்த இவர், சிறிது நேரம் எங்கேயோ வெறித்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, கொஞ்ச தூரம் சோர்வாக நடந்து சென்ற அந்த சிறுமி, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். சில விநாடிகளில் அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அந்த சிறுமி விழுந்ததை பார்த்தவர்கள் அலறி அடித்து ஓடி வந்து அவரை தூக்கினர். இதோடு அந்த சிசிடிவி காட்சிகள் முடிவடைந்தது. 

இந்த சம்பவம் குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பறைக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த குழந்தை நாற்காலியில் அமர்ந்தவாறு மயங்கி விழுந்ததாக கூறியிருக்கிறார். தொடர்ந்து அவருக்கு CPR சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

போலீஸார் விசாரணை: 

இறந்த சிறுமியின் தாத்தா-பாட்டியிடமும், அந்த சிறுமியை பார்த்துக்கொள்ளும் பெண்மணியிடமும், அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்த பெண்ணிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதன்படி, இறந்து போன அந்த குழந்தை, சுவாச பிரச்சனை மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனையால் கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இந்த வழக்கை விபத்து மரணம் என இதனை பதிவு செய்திருக்கின்றனர். அந்த குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே, இது குறித்த முழு விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே நடந்த சம்பவம்!

பெங்களூருவில் 3ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை இதே போல சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தது. அந்த சிறுமியும் இதே போல, பள்ளியில் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த குழந்தையின் உயிரும் பிரிந்தது. பிரேத பரிசோதனையில்தான் அந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க | திருவண்ணாமலை... நிலச்சரிவின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

மேலும் படிக்க | லாரி-பைக் மோதி விபத்து பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News