லாக்டவுனால் எந்த பயனும் இல்லை எனக் கூறிய கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா பொருளாதாரத்தை மேம்பாடுத்தி வாழ்வாதாரங்களை பெருக்க கவனம் செலுத்தப்படும் என்றார்.
கோவிட் -19 தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த ஜூலை 14 முதல் ஜூலை 22 வரை ஒரு வாரம் பெங்களூரு நகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு வாரம் லாட்க்டவுன் அமல் படுத்தப்பட்ட பின்னர், கர்நாடக முதலமைச்சர் BS Yediyurappa செவ்வாய்க்கிழமை, லாக்டவுன் தொற்றுநோய்க்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறினார்.
“லாக்டவுன் ஒரு தீர்வு அல்ல. பெங்களூரிலோ அல்லது மாநிலத்தின் வேறு எந்த மாவட்டத்திலோ லாக்டவுன் அமல்படுத்தப்படாது, ”என்று அவர் கூறினார்.
அரசு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த உள்ளது என்றும், வாழ்வாதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் தெரிவித்தார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டுமே கட்டுபாடுகள் இருக்கும் எனவும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற அனைவரும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பி பொருளாதார நடவடிக்கைகளை வழக்கம் போல் மேற்கொள்வார்கள் என அவர் கூறினார்.
மாநிலத்தில் கோவிட் -19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 98% என்றும், அதனால் பீதி அடையத் தேவையில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.
COVID -19 ஐ எதிர்த்துப் போராடுவதில் 5T மந்திரமான Trace, track, test, treat மற்றும் technology கடைபிடிக்கப்படும் எனவும் முதலவர் எடியூரப்பா கூறினார்.
ALSO READ | தில்லியில் 24% மக்களுக்கு கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்..!!
நோய் பரவுவதைத் தடுக்க, தனிநபர் விலகல், மாஸ்குகள் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். பொது இடத்தில் மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
கர்நாடகாவின் கோவிட் -19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 67,000 திற்கு அதிகமாகவும், ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 42,000 திற்கு அதிகமாகவும் உள்ளன.
தொற்றுநோயை எதிர்ப்பதில் எதிர்கட்சிகள் உதவ வேண்டும் என கோரினார். அவர் மேலும் கோவிட் -19 க்கு எதிரான நடவடிக்கையில் எந்த வித ஊழலும் இல்லை என்று கூறினார்.
"அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் வெளிப்படையானவை என்றும், எதிர்க்கட்சி கோரியுள்ள அனைத்து விவரங்களும் ஆவணங்களும் 24 மணி நேரத்திற்குள் வழங்க்லப்படும். ஒரு ரூபாய் கூட எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தப்படவில்லை, ” என்றார் முதலவர் எடியூரப்பா.
ALSO READ | வங்க தேச துறைமுகம் வழியாக முதல் சரக்கு கப்பல்… புதிய வர்த்தக மையமாக மாறும் திரிபுரா…!!!
இந்த மாத தொடக்கத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, கோவிட் -19 தொடர்பான உபகரணங்களை வாங்குவதில் ₹2,200 கோடி மோசடி நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.