ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்கும் விழா தொடங்கி கோலகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருமான, ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவி ஏற்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராகவும் புதிய முதல் மந்திரியாகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து,இன்று காலை ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருமான, ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் இன்று பிரதமர் மோடி, அவரை தொடர்ந்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
#JaiRamThakur takes oath as chief minister of Himachal Pradesh pic.twitter.com/Xv1kDII2H3
— ANI (@ANI) December 27, 2017
Prime Minister Narendra Modi at swearing-in ceremony of Himachal CM elect #JairamThakur and others, in Shimla pic.twitter.com/cW7Eo8I72i
— ANI (@ANI) December 27, 2017
#WATCH Oath taking ceremony of Himachal CM elect Jairam Thakur and others in Shimla in the presence of PM Modi https://t.co/UmlrABGVsI
— ANI (@ANI) December 27, 2017