சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
"தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், ஷரத் ஷெட்டி ஆகியோர் மும்பை காவல்துறை ஆணையர் யார், அமைச்சரவையில் யார் அமர்வார்கள் என்று முடிவு செய்த ஒரு காலம் இருந்தது. அப்போது இந்திரா காந்தி குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகுவதைப் பார்த்துள்ளோம்.'' என்று புதன்கிழமை தாமதமாக ரவுத் தெரிவித்துள்ளார்.
ஒரு விருது விழாவின் போது செய்தி நிறுவனங்களுடன் பேசியபோது வெளிப்படையாக பேசிய சிவசேனா இந்த கருத்துக்களை தெரிவித்தார். மும்பையில் பாதாள உலகத்தின் நாட்களை நினைவு கூர்ந்த ரவுத், தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் மற்றும் ஷரத் ஷெட்டி போன்ற குண்டர்கள் ஒரு கட்டத்தில் பெருநகரங்களையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்த பயன்படுத்தப் பட்டனர் என தெரிவித்துள்ளார்.
"ஹாஜி மஸ்தான் அமைச்சரவைக்கு வரும்போது, முழு அமைச்சரவையும் அவரைப் பார்க்க வந்துவிடும். இந்திரா ஜி கரீம் லாலாவை பைடோனியில் (தெற்கு மும்பையில்) உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க வருவார்," என்று ரவுத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"அவை பாதாள உலகத்தின் நாட்கள். பின்னர், எல்லோரும் (குண்டர்கள்) நாட்டை விட்டு வெளியேறினர். இப்போது அப்படி எதுவும் இல்லை" என்று சிவசேனா தலைவர் மேலும் குறிப்பிட்டார். மறைந்த குண்டர்கள் கரீம் லாலா 1960 முதல் 1980 வரை மும்பையில் மதுபானம், சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் மோசடிகளை நடத்தி வந்தார். அவர் 2002-ல் இறந்தார்.
பாதாள உலக குண்டர்களின் புகைப்படம் எடுத்தாரா என்று வினவியபோது, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிம் உட்பட பல குண்டர்களின் படங்களை கிளிக் செய்ததாக ரவுத் கூறினார்.
ஒரு காலத்தில் தாவூத்தை(இப்போது ரகசியமாக பாகிஸ்தானில் வசிப்பதாக நம்பப்படுகிறது) கண்டித்ததாகவும் சேனா தலைவர் கூறினார். "நான் அவரைப் பார்த்தேன், நான் அவரைச் சந்தித்தேன், அவருடன் பேசினேன், நானும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளேன்" என்று அவர் மேலும் கூறினார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ரவுத்தின் கட்சி மகாராஷ்டிராவில் NCP மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருவதை நினைவு கூரலாம். இந்நிலையில் இந்திரா காந்தி குறித்து ரவுத் கூறிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடுகளை தூண்டியுள்ளது. மேலும் சிவசேனா தலைவரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து விளக்கம் கோரியுள்ளது.
இதற்கிடையில், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் -பாதாள உலக உறவு குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் கட்கோபர் எம்எல்ஏ ராம் கதம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜக தலைவருமான ஆஷிஷ் ஷெலார் ரவுத்தின் கூற்றுக்குப் பின்னர் காங்கிரஸைத் தாக்கியதோடு, தேசியக் கட்சி எப்போதுமே பாதாள உலகக் குண்டர்கள் மற்றும் குண்டர்களுடன் ஒரு தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். மும்பையில் மறைந்த குண்டர்கள் கரீம் லாலாவுடன் இந்திரா காந்தி சந்தித்ததாகக் கூறப்படும் சஞ்சய் ரவுத் கூறிய கூற்றுக்கள் குறித்து CBI விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷெலர் கோரிக்கை விடுத்துள்ளார்.